உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

1

151

சோழ கேரள மண்டலத்து வெங்கால நாட்டுக் கருவூரான முடி வழங்கு சோழபுரத்துத் திருவானிலை மாதேவர்' என்னுங் கல்வெட்டுத் தொடர் மொழிகள் இவ் வுண்மையை நன்கு விளக்கி நிற்றல் காண்க. இப்போர் நிகழ்ச்சி இவனது பதினோராம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில்' காணப்படுவதால் இது கி.பி.1194-ஆம் ஆண்டிற்கு முன்னர் நிகழ்ந்திருத்தல் வேண்டுமென்பது நன்கு துணியப்படும். இது முதல் இவன் ஆட்சிக்காலத்துக் கல்வெட்டுக்கள் கருவூரிலும் கொங்கு நாட்டிலும் காணப்படுதல் அறியற்பாலதாம்.

வன் வடநாட்டில் நிகழ்த்திய போர்

நம் குலோத்துங்கன் காலத்தில் சித்தூர், நெல்லூர், கடப்பை ஜில்லாக்களில் சில தெலுங்க மன்னர்கள் ஆட்சி புரிந்து கொண்டிருந்தனர். அவர்கள் தெலுங்குச் சோடர் எனவும் கூறப்படுவர். அன்னோருள், நல்லசித்தரசன், தம்முசித்தி யரைசன், திருக்காளத்தி தேவன் என்போர், குலோத்துங்கன் ஆட்சிக் காலத்திலிருந்த தெலுங்க மன்னர் ஆவர். அவர்கள் எல்லோரும் இச் சோழர் பெருமானுக்குத் திறை செலுத்திக் கொண்டு குறுநில மன்னராக வாழ்ந்து வந்தவர் என்பது அவர்கள் நாட்டில் காணப்படும் கல்வெட்டுக்களால் நன்கறியக் கிடக் கின்றது. எனவே, வட புலத்திலுள்ள அன்னோர் நாட்டின் மேல் இவ் வேந்தன் படையெடுப்பதற்கு ஏது சிறிதும் இல்லை யனலாம். ஆனால், திருவரங்கத்திலுள்ள இவனது 19-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று, இவன் வட வேந்தரைப் 4 போரில் வென்று கோபந்தணிந்து காஞ்சி மாநகர் புகுந்து அரசர்களிடம் திறை வாங்கினான் என்று கூறுகின்றது. சில கல்வெட்டுக்கள் இவன் காஞ்சியைக் கைப்பற்றினான் என்று உணர்த்துகின்றன. எனவே, இவன் பிறவேந்தன் ஒருவனைப்

5

1. S.I.I., Vol. III, No. 23.

2. Ins. 397 of 1925.

3. Nellore Inscriptions, N. 85; Ibid. 40; S.I.I., Vol. V, No. 496; Ins. 601 of 1904; Ins. 578 of 1907; Nellore Inscriptions. A. 18; Ibid, G. 86.

4. S.I.I., Vol. III, No. 88.

5. Inscriptions of the Pudukkottai State, No. 164; Ins. 2 of 1905 Ibid, No. 158.