உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




150

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

நிகழ்ச்சி குலோத்துங்கனது பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் காணப்படுவதால் இது கி. பி. 1188-ஆம் ஆண்டி லாவது அதற்குச் சிறிது முன்னராவது நடைபெற்றதாதல் வேண்டும். சிங்கள நாட்டில் இப்போர் நிகழ்ந்தபோது அங்கு ஆட்சி புரிந்து கொண்டிருந்தவன் பராக்கிரம பாகு' என்ற அரசனா அல்லது அவனுக்குப் பிறகு பட்டம் பெற்ற மன்னருள் ஒருவனா என்பது இப்போது புலப்படவில்லை.

இவன் கொங்கு நாட்டில் நடத்திய போர்

3

குலோத்துங்கன் ஈழ நாட்டு மன்னனை வென்ற பின்னர், கொங்கு நாட்டின்மேற் படையெடுத்துச் சென்று, அதன் தலைநகராகிய கருவூரைக் கைப்பற்றி, அங்குச் சோழ கேரளன் என்னும் பெயருடன் விசய மாமுடி சூடினானென்று இவன் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. கொங்கு நாட்டு மன்னர், சேரருள் ஒரு கிளையினரே யாவர். அவர்கள் முதல் ஆதித்த சோழன் கால முதல் சோழ மன்னர்க்குத் திறை செலுத்திக் கொண்டு குறுநில மன்னராயிருந்து வந்தனர். அவர்கள் இரண்டாம் இராசாதிராசன் ஆட்சிக் காலத்தில் சுயேச்சை யெய்திச் சோழர்க்குக் கப்பஞ் செலுத்துவதை நிறுத்தியிருத்தல் வேண்டுமென்பதும், அதுபற்றியே நம் குலோத்துங்கன் தன் ஆட்சியில் கொங்கு நாட்டின்மேற் படையெடுத்துச் சென்று, அந்நாட்டு மன்னனைப் போரில் வென்று கருவூரைக் கைப்பற்றினன் என்பதும் அறியற் பாலனவாம். தோல்வியுற்ற கொங்கு வேந்தன் குலோத்துங்கன் பால் அடைக்கலம் புகுதலும் இவன் அவனுக்குரிய நாட்டை வழங்கித் தனக்குட்பட்ட சிற்றரசனாயிருந்து அரசாண்டு வருமாறு செய்தமை குறிப்பிடத்தக்கது. இங்ஙனம் கொங்கு நாட்டரசனுக்குக் குலோத்துங்கன் அரசளித்து முடி வழங்கியமைப் பற்றிக் கருவூர் முடி வழங்கு சோழபுரம் என்னும் பெயர் எய்துவ தாயிற்று. கொங்கு நாடும் சோழர் ஆட்சிக்குட்பட்டமையால் சோழ கேரள மண்டலம் என்னும் பெயர் பெற்றது. 'கொங்கான

1. Nellore Inscriptions, N. 85.

2. இவன் முதல் பராக்கிரம பாகு ஆவன்; கி. பி. 1153 முதல் 1186 முடிய ஈழ நாட்டில் ஆட்சி புரிந்தவன்.

3. Inscriptions of Pudukkottai State, No. 166.