உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

149

பட்டிருத்தலால் அப்போர் கி.பி. 1188-ல் நிகழ்ந்ததாதல் வேண்டும். தன்பால் அடைக்கலம் புகுந்த வீரபாண்டியன், அவன் மக்கள், சேர மன்னன் ஆகிய எல்லோர்க்கும் நம் குலோத்துங்கன் ஆதரவளித்து அவர்கட்கு வேண்டியவற்றை அன்புடன் வழங்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் கி. பி. 1188 ஆம் ஆண்டிற்கும் 1193-ஆம் ஆண்டிற்குமிடையில் நடை பெற்றிருத்தல் வேண்டுமென்பது ஒருதலை.1

இவன் நிகழ்த்திய ஈழ நாட்டுப் போர்

சிங்கள மன்னர்க்கும் சோழ மன்னர்க்கும் நெடுங் காலமாகப் பகைமை இருந்து வந்தது. இராசாதிராச சோழன் ஆட்சியில் ஈழ மன்னனாகிய பராக்கிரம பாகு என்பான் வீரபாண்டியனுக்கு உதவி புரியப் படையனுப்பித் தோல்வி யுற்றமையும், பிறகு குலசேகரப் பாண்டியனைத் தன் வயப்படுத்திக் கொண்டு சோணாட்டிற்குத் தீங்கிழைக்க முயன்றமையும், அதனால் குலசேகரபாண்டியன் தன் அரசிழக்க வீர பாண்டியன் பாண்டி நாட்டில் மறுபடியும் ஆட்சி புரியும்படி இராசாதிராசன் செய்ய சி நேர்ந்தமையும் முன்னர் விளக்கப்பட்டன. அவ் வீர பாண்டியன் சில ஆண்டுகளுக்குப் பிறகு குலோத்துங்கனோடு முரண் பட்டமையும் அது பற்றி இவன் பாண்டி நாட்டின் மேல் படை யெடுத்துச் சென்று அவனைப் போரிற் புறங்கண்டு, அவன் நாட்டைக் கைப்பற்றி, அதனை விக்கிரம பாண்டியனுக்கு அளித்தமையும் முன்னர்க் கூறப்பட்டுள்ளன. நம் குலோத்துங்கன் வீரபாண்டியனோடு அப்போர் நிகழ்த்தியபோது சிங்கள மன்னன் பாண்டியனுக்குப் பெரும் படையொன்றை ஈழ நாட்டி லிருந்து அனுப்பி உதவி புரிந்தனன்.* அக் காரணம் பற்றியே இவன் ஈழ நாட்டின்மேல் படையெடுத்துச் சிங்கள வேந்தனை அடக்குவது இன்றியமையாததாயிற்று. இவன் அந்நாட்டில் புரிந்த போரில் சிறந்த வெற்றி யெய்தியிருத்தல் வேண்டுமென்பது இவன் கல்வெட்டுக்களால் நன்கறியக் கிடக்கின்றது. இப்போர்

1.

3

திருக்கடவூரிலுள்ள இவனது 15, 16 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக்களில் இ செய்திகள் காணப்படுவதால் இவை கி. பி. 1193-க்கு முன் நிகழ்ந்தனவாதல் வேண்டும். 2.S.I.I.,Vol. III, No. 86.

3. Ibid, No. 36; Ins. 505 of 1922; Ins. of Pudukkottai State, No. 166.