உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




148

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

பிடித்து வேளம் ஏற்றினான்.'தன் முயற்சி பயன்படாமையோடு தனக்குப் பேரழிவையும் பெருந்துன்பத்தையும் தந்ததைக் கண்டு பெரிதும் வருந்திய வீர பாண்டியன், தன் சுற்றத்தினருடன் மலைநாடு சென்று சேர மன்னன்பால் அடைக்கலம் புகுந்தான். பாண்டியனுக்கு உதவி புரிந்தமை பற்றி குலோத்துங்கன் தனக்கு ஏதேனும் தீங்கிழைத்தல் கூடும் என்றஞ்சிய அச் சேர வேந்தன் அவனையும் அவன் மக்கள் இருவரையும்' அழைத்துக்கொண்டு சோணாட்டிற்கு வந்து எல்லோரும் ஒருங்கே குலோத்துங் கனிடத்தில் அடைக்கலம் புகுந்தனர். இவன் எல்லோரையும் அன்புடன் ஏற்று அவர்களுள் வீரபாண்டியனுக்குப் பாண்டி நாட்டில் ஒரு பகுதியும் முடியும் அளித்தனன். சேரனுக்குப் பிற வேந்தர் பெறாத பெருந் திருவும் வழங்கினான். வீரகேரளனுக்குப் பாரறிய வாழ்வருளித் தன் பக்கமிருந் துண்ணச் செய்தான்; பருதி குலபதி என்னும் பெயருடைய வீரபாண்டியன் புதல்வனுக்கு 'இருநிதியும் பரிசட்டமும் இலக்குமணிக் கலனும்’ நல்கினான்.3 எனவே, அடைக்கலம் புகுந்தாரை இவன் நன்கு ஆதரித்தமை அறிக. இவன் பாண்டி நாட்டில் இரண்டாம் முறை நடத்திய போர் இவ்வாறு முடிவெய்தியது எனலாம்.

இனி, இவ்வேந்தன் பாண்டி நாட்டில் பெற்ற முதல் வெற்றி, இவனது இரண்டாம் ஆட்சி யாண்டில் திருவக்கரை கோயிலில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டொன்றில் காணப் படுதலால் அப்போர் கி.பி. 1180-ஆம் ஆண்டில் நடை பெற்ற தாதல் வேண்டும். இவன் நிகழ்த்திய இரண்டாம் போர் நெல்லூரி லுள்ள இவனது பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில்' கூறப்

1. S.I.I., Vol. VII, No. 797; Inscriptions of Pudukkottai State, No. 166. 2. வீரபாண்டியன் தன் மகனுக்குப் பருதி குலபதி என்று பெயரிட்டுக் குலோத்துங்கன்பால் அழைத்து வந்தமையாலும், அவனினும் வேறாய வீர கேரளன் ‘மீனவனாம் வீர கேரளன் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டிருத்தலாலும் பருதி குலபதியும் வீரகேரளனும் வீரபாண்டியன் புதல்வர்கள் ஆதல்வேண்டும். திருக்கொள்ளம் பூதூரிலுள்ள கல்வெட் டொன்று வீரபாண்டியன் மக்கள்' என்று பன்மையிற் கூறுவதும் அவனுக்குப் பல புதல்வர் இருந்தனர் என்பதைப் புலப்படுத்தாநிற்கும். (S.I.I., Vol. VI, No. 436.) அவர்களுள் எஞ்சியிருந்தோர் இவ்விருவருமே போலும்.

று

3. S.I.I., Vol. III, No. 88; Inscriptions of Pudukkottai State, No. 166.

4. Ins. 190 of 1904.

5. S.I.I., Vol. V, No. 492; Nellure Inscriptions, N. 169.