உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

147

வீரபாண்டிய னோடு போர் தொடுப்பது இன்றியமையாத தாயிற்று. ஆகவே, இவன் பாண்டி நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று அப்பாண்டி வேந்தனோடு போர் புரிந்தபோது அவன் புதல்வருள் ஒருவன் இறந்தமையோடு அவனுடைய ஏழகப் படைகளும் மறவர் படைகளும் எதிர்நின்று போர்புரியும் ஆற்றலையிழந்து அழிந்தும் போயின. அவனுக்கு உதவிபுரிதற் பொருட்டுப் பராக்கிரம பாகுவால் அனுப்பப்பெற்ற சிங்களப் படைகளும் பெருந்தோல்வியெய்தி இலங்கைக்கு ஓடிவிட்டன. எனவே, குலோத்துங்கன் இப்போரில் பெருவெற்றி பெற்று, மதுரையும் அரசுங் கொண்டு வெற்றித்தூண் நிறுவி, அம் மதுரையும் அரசும் நாடும் தன்னை அடைந்த விக்கிரம பாண்டியனுக்கு அளித்தனன்.1 இதுவே வன் பாண்டி நாட்டில் நிகழ்த்திய முதற் போராகும்.

இவன் பாண்டியனோடு நிகழ்த்திய இரண்டாம் போர்

வீரபாண்டியன் தன் நாட்டை யிழந்த பிறகு மலை நாடு சென்று, சேர மன்னன் உதவி பெற்று அதனை மீட்க முயன்றான். அவ்வேந்தன் தனக்குத் துணையாக அனுப்பிய சேர நாட்டுப் படையுடன் சிதறிக் கிடந்த தன் படையையும் ஒருங்கு சேர்த்துக் கொண்டு அவ்வீரபாண்டியன் மதுரை மாநகர் மீது போர்க்குப் புறப்பட்டான். அதனை யறிந்த குலோத்துங்கன் பெரும் படையோடு சென்று அவனை எதிர்ப்பானாயினன். மதுரைக்குக் கிழக்கேயுள்ள நெட்டூரில்' இருபெரும் படைகளும் எதிர்த்துக் கொடும்போர் புரிந்தன. இப் போரிலும் பாண்டி நாட்டுப் படையும் சேர நாட்டுப் படையும் முற்றிலும் தோல்வியுற்றுச் சிதறுண்டும் அழிந்தும் போயின. இப்போர் நிகழ்ச்சியில் வெற்றியெய்தி வாகைசூடிய குலோத்துங்கன் பாண்டியர்க்கு வழிவழி யுரியதாயிருந்த முடியைக் கைப்பற்றிக் கொண்டமை யோடு வீரபாண்டியனுடைய பட்டத்தரசியையும் சிறை

1. இஃது இலங்கையிலிருந்து படை வந்தமையால் அறியப்படும். 2.S.I.I.,Vol. III, Nos. 86 and 87; Ibid, Vol. No. 436.

3. நெட்டூர் என்பது இராமநாதபுரம் ஜில்லா சிவகங்கைத் தாலுக்காவில் இளையான்குடிக் கண்மையில் உள்ளது.