உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




146

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 மண்வளர’ என்று தொடங்கும் நீண்ட மெய்க்கீர்த்தி கொண்டு' வன் தன் ஆட்சியில் நிகழ்த்திய பல அரிய செயல்களைத் தெளிவாக உணர்த்துகின்றது. அந்நாளில், இவன் இயற் பெயரோடு இணைத்து வழங்கப்பெற்று வந்த சில பட்டங்களும் இவன் வீரச் செயல்களை நன்கு விளக்குவன வாயிருத்தல் அறியற் பாலதாம். இனி, அவற்றின் துணை கொண்டு இவன் காலத்தில் நிகழ்ந்துள்ள போர் நிகழ்ச்சிகளை ஆராய்ந்து காண்போம். இவன் பாண்டியனோடு நிகழ்த்திய முதற் போர்

இவ்வேந்தனுக்கு முன் அரசாண்ட இரண்டாம் இராசாதி ராசன் பாண்டி மன்னர்க்குள் ஆட்சியுரிமை பற்றி நடைபெற்ற போர்களில் கலந்துகொள்ள நேர்ந்தமையும், வீரபாண்டியனை வென்று குலசேகர பாண்டியனுக்குப் பாண்டி நாட்டை வழங்கியமையும், பிறகு அக்குலசேகரன் ஈழ நாட்டரசன் பராக்கிரம பாகுவோடு சேர்ந்துகொண்டு சூழ்ச்சி செய்தமை பற்றி அவனைப் போரில் வென்று அவன் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த பாண்டி நாட்டை வீரபாண்டியனுக்கு அளித்தமையும் முன்னர் நன்கு விளக்கப்பட்டுள்ளன. நாட்டை யிழந்த குலசேகர பாண்டியன் தன் செயலே தனக்குத் தீமை விளைத்தது என்னுங் கருத்தினனாய் ஒரு சில ஆண்டு உயிர் வாழ்ந்திருந்து பிறகு இறந்திருத்தல் வேண்டும். அவனுக்கு விக்கிரம பாண்டியன் என்ற புதல்வனொருவன் இருந்தனன். நம் குலோத்துங்கன் பட்டம் பெற்றவுடன், அவ்வரச குமாரன் இவன்பால் அடைக்கலம் புகுந்து, தன் தந்தையிழந்த பாண்டி நாட்டைத் தான் பெற்று அரசாளும்படி செய்தல் வேண்டுமென்று வேண்டிக் கொண்டான். இச் சமயத்தில் பாண்டி நாட்டில் ஆட்சி புரிந்துகொண்டிருந்த வீர பாண்டியனும் இராசாதிராச சோழன் தனக்குப் புரிந்த உதவியை மறந்து, மறுபடியும் இலங்கை மன்னனோடு சேர்ந்துகொண்டு சோழ நாட்டிற்குப் பகைவனாகி முரண்பட்ட நிலையிலிருந்தனன்.2 எனவே, குலோத்துங்கன்

1. Ins. 176 of 1908; S.I.I., Vol. VII, No. 942. இதன் முதல் வரிதான் உளது. 2. Inscriptions of Pudukkottai State, No. 166. இதுகாறும் கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் இரண்டில் மாத்திரம் இம்மெய்க்கீர்த்தி உளது. ஒன்று குடுமியான் மலையிலும் மற்றொன்று புதுக்கோட்டை நாட்டுச் சேரனூரிலும் இருத்தல் அறியற்பாலது. (Ibid, Nos. 166 and 163.)