உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

145

அக்கோயில், தன் தந்தையால் கட்டப்பெற்றது என்பதைப் புதுக்கோட்டை நாட்டிலுள்ள குடுமியான் மலைக் கல்வெட் டொன்றில்' நம் குலோத்துங்கன் குறித்திருப்பதால் இரண்டாம் இராசராச சோழனே இவன் தந்தையாயிருத்தல் வேண்டு மென்பது இனிது வெளியாகின்றது. ஆகவே, இவ் வேந்தன் இரண்டாம் இராசராச சோழனுடைய புதல்வன் என்பது நன்கு துணியப்படும்.

இனி, இவனுக்கு முன் அரசாண்ட இராசாதிராசசோழன், இராசகேசரி என்ற பட்டம் புனைந்து கொண்டிருந்தமையால் சோழ மன்னர்களின் ஒழுகலாற்றின்படி இவன் பரகேசரி என்ற பட்டம் புனைந்து ஆட்சி புரிவானாயினன். எனினும், சில கல்வெட்டுக்களில் இவன் இராசகேசரி என்று தவறாகக் கூறப் பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நம் குலோத்துங்கன் நாற்பது ஆண்டுகள் அரசாண்டிருத் தலால் இவன் கல்வெட்டுக்கள் தமிழ்நாடு முழுவதும் மிகுதியாகக் காணப்படுகின்றன. அக்கல்வெட்டுக்களில் இவனுடைய வீரம் ஆற்றல் முதலானவற்றை விளக்கும் சில மெய்க்கீர்த்திகளும் உள்ளன. அவற்றுள், 'புயல் வாய்த்து வளம் பெறுக' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தி இவனது மூன்றாம் ஆட்சி யாண்டு முதல் கல்வெட்டுக்களில் வரையப் பெற்றுள்ளது.' இதுவே, 'புயல் வாய்த்து மண் வளர' என்றும், 'புயல் பெருக வளம் பெறுக' என்றும் சில கல்வெட்டுக்களில் சிறிது வேறுபட்டுக் காணப்படு கின்றது.ஃ பிறிதொன்று, ‘மலர் மன்னு பொழிலேழும்" என்னும் தொடக்கத்தை யுடையதாகும். இம் மெய்க்கீர்த்தி இவனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டு முதல் கல்வெட்டுக்களில் பொறிக்கப் பட்டுள்ளது. 'பூமருவிய முகத்தோன்' என்று தொடங்கும் வேறொரு மெய்க்கீர்த்தியும் இவனது ஐந்தாம் ஆட்சியாண்டு முதல் சில கல்வெட்டுக்களில் உளது. அன்றியும், புதுக்கோட்டை நாட்டைச் சார்ந்த குடுமியான் மலையிலுள்ள 'புயல் வாய்த்து

1. Inscriptions of Pudukkottai State, No. 166.

2. S.I.I., Vol. III, No. 85.

3. Ibid, Vol. V, No. 632; Ibid, Vol. VII, No. 797.

4. Ins. 173 of 1918.