உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

3

ம்

1

159

ஹேமவதி ஆவனி முதலான ஊர்களிலும் வடக்கேயுள்ள நெல்லூர் ஜில்லாவில் நெல்லூர், ரெட்டிப்பாளையம், மல்லம் ஆகிய ஊர்களிலும் கடப்பை ஜில்லாவில் நந்தலூர், பொத்தப்பி என்ற ஊர்களிலும் இன்றும் உள்ளன. எனவே, தெற்கேயுள்ள குமரிமுனை முதல் வடக்கேயுள்ள வேங்கி நாடு வரையில் இவன் ஆட்சிக் காலத்தில் சோழ இராச்சியம் பரவியிருந்தது என்பது ஒருதலை. ஆகவே, சேர நாடு, பாண்டி நாடு, கொங்கு நாடு, கங்க நாடு, தெலுங்க நாடு என்ற புற நாடுகள் எல்லாம் இவன் காலத்தில் சோழ இராச்சியத்திற்கு உட்பட்டிருந்தமை உணரற் பாலதாம். இவனுடைய முன்னோர்களான முதல்

ராசராச சோழன், கங்கைகொண்ட சோழன், முதற் குலோத்துங்க சோழன் ஆகிய பெரு வேந்தர் காலங்களில் சோழ இராச்சியத்தில் எங்ஙனம் ஆட்சி அமைதியாக நடைபெற்று வந்ததோ அங்ஙனமே இவன் காலத்தும் நடைபெற்றுளது என்பது நம் தமிழகத்தும் அதற்கப்பாலும் காணப்படும் இவன் கல்வெட்டுக்கள் பல வற்றாலும் நன்கறியக் கிடக்கின்றது. எனவே, இன்னும் அத்தகைய பெரு வேந்தர்களுள் ஒருவனாக வைத்துப் பாராட்டத்தக்க சிறந்த குணங்கள் படைத்த பெரு வீரன் ஆவான்.

இவன் சமயநிலையும் திருத்தொண்டும்

சோழ மன்னர் எல்லோரும் சைவ நெறியைக் கைக் கொண்டு ஒழுகியவர் எனலாம். நம் குலோத்துங்கனும் அங்ஙனமே சைவ சமயத்தில் பெரிதும் ஈடுபாடுடையவனா யிருந்தனன் என்று தெரிகிறது. இவனது சிவபக்தி அளவிட்டுரைக்குந் தரத்ததன்று; தஞ்சாவூர் ஜில்லா திரிபுவனத்திலுள்ள கல்வெட்டொன்று' இவனைத் தில்லைச் சிற்றம்பல வாணருடைய ‘ஏகபக்தன்' என்று கூறுவது குறிப்பிடத்தக்கது. திருவாரூரில் எழுந்தருளியுள்ள இறைவன் தம் கோயில் தானத்தார்க்கு அருளிய உத்தர வொன்றில், இவ்வரசர் பெருமானை 'நம் தோழன்' எனக் கூறியுள்ளனர் என்று அவ்வூரிலுள்ள இவனது இருபத்து நான்காம் ஆட்சியாண்டுக்

1. Ibid, Vol. VI, No. 553. Ep. Car., Vol. X. Mb. 44(b) Ibid No. 125.

2. Nellore Inscriptions. N. 69 Ibid, 72; G 86; Ibid, No. 53 Ins. 521 of 1908.

3. Ins.586 of 1907 Ins. 601 of 1907 Ins. 435 of 1911.

4. Annual Report on Epigraphy, Southern Circle, for 1908, part II, para 64.