உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




160

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 கல்வெட்டொன்று' உணர்த்துகின்றது. சைவ சமய குரவராகிய சுந்தரமூர்த்திகளைச் சிவபெருமான் தம் தோழராகக் கொண்டிருந்தனர் என்பதும் அது பற்றி அவ்வடிகள் 'தம்பிரான் தோழர்' என்று வழங்கப்பெற்று வந்தனர் என்பதும் பெரிய புராணம் முதலான வரலாற்று நூல்களாலும் பிறவற்றாலும் அறியப்படுகின்றன. அவ் வடிகளுக்குப் பிறகு இறைவனோடு அத்தகைய தோழமை நிலையில் அமைந்திருந்தோர் யாரும் இலர். அஃது அங்ஙனமாக, நம் குலோத்துங்கன் சிவ பெருமானுக்குத் தோழன் ஆகும் பேறு பெற்றமை இவன் எத்துணைச் சிவபக்தி வாய்ந்தவனாகயிருத்தல் வேண்டும் என்பதை நன்கு புலப் படுத்துவதாகும்.

இவ் வேந்தன் சிவாலயங்களுக்குச் செய்துள்ள திருப் பணிகள் மிகப் பல. புதுக்கோட்டையைச் சார்ந்த குடுமியான் மலையிலும் சேரனூரிலும் காணப்படும் இரு கல்வெட்டுக்கள்' அவற்றை விளக்கிக் கூறுகின்றன. அன்றியும், திருவிடைமருதூர்க் கண்மையிலுள்ள திரிபுவனத்தில் வரையப்பெற்ற இவனது

மொழிக் கல்வெட்டொன்று' இவன் புரிந்துள்ள சிவன் கோயில் திருத்தொண்டுகளை ஆராயுமிடத்து, இவன் தன் ஆட்சிக் காலத்தில் பெரும் பொருளைச் சிவாலயங்களுக்குத் திருப்பணி செய்வதில் செலவிட்டுள்ளமை நன்கு புலனாகும்.

வ்

இவனது 24-ஆம்ஆட்சியாண்டில் இவன்திரிபுவன வீரதேவன் என்னும் பட்டம் எய்தியமை முன்னர் விளக்கப் பெற்றது. அச் சிறப்புப் பெயர் என்றும் நின்று நிலவ வேண்டுமென்ற கருத்தினனாய்த் திருவிடைமருதூர்க்கு அண்மையில் திரிபுவன வீரேச்சுரம் என்னும் சிவன் கோயில் ஒன்று இவ் வேந்தன் எடுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.4 இப் பெருங் கோயில் சிற்பத் திறத்தில் ஈடும் எடுப்புமற்றதாகவும் கண்கவரும் வனப்பின தாகவும் பிற்காலச் சோழர் காலத்துக் கோயில்களுக்கு ஓர் எடுத்துக் காட்டாகவும் இன்றும் விளங்கிக்கொண்டிருப்பது

1. Ins. 554 of 1904.

2. Inscriptions of the Pudukkottai State, Nos. 163 and 166.

3. Ins. 190 of 1907.

4. ARE for 1908, part II, para 64.