உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

161

அறியற்பாலது. இக்கோயிலுக்குக் கடவுண் மங்கலம் செய்தவர். இவ் வேந்தனுடைய குருவும் சித்தாந்த ரத்நாகரம் என்ற நூலியற்றியவரும் சீகண்ட சம்புவின் புதல்வரும் ஆகிய ஈசுவர சிவனார் ஆவார். '

1

இனி, இவ் வரசர் பெருமான் புரிந்த சிவன் கோயில் திருப்பணிகளுள் மதுரைத் திருப்பணிகள், முன்னர்க் கூறப் பட்டுள்ளன. பிற திருப்பணிகள் தில்லையம்பதியில் பேரம் பலம் பொன் வேய்ந்தமையும் அம்பலவாணரது திருக்கோயில் முகமண்டபம் மூன்றாம் பிரகாரம் சிவகாமி யம்மையின் கோயிற் கோபுரம் என்பவற்றை எடுப்பித்தமையும், காஞ்சி, திருவிடைம ருதூர், இராசராசபுரம் ஆகிய இடங்களில் அரும் பணிகள் ஆற்றியமையும் திருவாரூரில் சபா மண்டபமும் பெரிய கோபுரமும் கட்டுவித்தமையும் ஆகும்.*

இத்துணைச் சிவபக்தி வாய்ந்த இம் மன்னவன் மற்றைச் சமயங்களிடத்தில் சிறிதும் வெறுப்புக் காட்டாமல் அவற்றை அன்புடன் ஆதரித்து வந்தனன் என்பது இவன் கல்வெட்டுக் களால் அறியக் கிடக்கின்றது. தென்னார்க்காடு ஜில்லா வேலூரிலுள்ள திருமால் கோயிலுக்குக் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்று தன் பெயர் வைத்து, அதற்கு நிவந்தமாகக் குலோத்துங்க சோழ நல்லூர் என்ற ஊரை இவன் தன் ஆட்சியின் 3-ஆம் ஆண்டாகிய கி. பி. 1181-ல் வழங்கினன் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகின்றது. இங்ஙனமே சைனப் பள்ளி களுக்குப் பள்ளிச் சந்த இறையிலியாக இவன் நிலம் அளித்த செய்திகள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. எனவே,

1.

3

சித்தாந்தசாரம் என்னும் நூல் இயற்றியுள்ள ஈசான சிவர் என்பார் இவ் வீசுவர சிவனாராகவே இருத்தல் கூடும் என்பது அறிஞர்களது கருத்து. (Ibid)

2. Ibid, paras 64 and 65.

3. Ins. 114 of 1919.

4. 'திரிபுவனச் சக்கரவர்த்திகள் மதுரையும் பாண்டியன் முடித் தலையுங் கொண்டருளிய ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு 21 ஆவது மண்டியங்கிழான் குலோத்துங்க சோழ காடு வெட்டிகள் ராஜ காரியஞ் செய்து நாயனாரைத் திருவடித்தொழ உனக்கு வேண்டுவன வேண்டிக்கொள்ளென்று திருவுள்ளமாயருள எங்கள் குருக்கள் சந்திரகீர்த்தி தேவர் திருப்பருத்திக் குன்றிலே இருப்பர். அக்கோயிலுக்கு இருபது வேலி நிலம் திருவுள்ளமாடித் தருளவேணுமென்று இக்கோயிற் காணி கொட்டையூர் ஆசிரியப் பட்டமுங் கொடுத் தருளி அம்பையிலே இருபதிற்று வேலி நிலத்துக்கு திருமுகம் பிரசாதித்த திருமுகப்படி கல்வெட்டு’ (S.I.I., Vol. IV, No. 366.)