உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




162

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

பேரரசர்கட்கு இன்றியமையாது வேண்டப்படும் சமயப் பொறை இவன்பால் நன்கு அமைந்திருந்தமை காண்க.

தலைநகர்

இவ் வேந்தன் ஆட்சியில் கங்கைகொண்ட சோழபுரமே தலைநகரமாக இருந்தது. பழையாறையாகிய இராசராசபுரம் இரண்டாவது தலைநகராக விளங்கியது. விக்கிரம சோழபுரமும் இவன் ஆட்சியில் அரசன் தங்கியிருத்தற்குரிய சிறிய நகரமாக இருந்ததென்று தெரிகிறது.'

மனைவியரும் புதல்வனும்

பட்டத்தரசி புவன

வ்

இவ்வரசர் பெருமானுடைய முழுதுடையாள் என்று வழங்கப் பெற்றனள் என்பது 'செம்பொன் வீர சிம்மாசனத்துப் புவன முழுதுடையாளோடும் வீற்றிருந் தருளிய கோப்பரகேசரி பன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் மதுரையும் ஈழமுங் கொண்டு பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளின ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்' என்னுங் கல்வெட்டுப் பகுதியால்' நன்கறியக் கிடக்கின்றது. இவ் வரசியைப் பற்றிய பிற செய்திகள் புலப்படவில்லை. இவ் வேந்தனுக்கு வேறொரு மனைவியும் இருந்தனள். இச் செய்தியை ‘நம்பிராட்டியாரில் இளைய நம்பிராட்டியார்' என்ற கல்வெட்டுத் தொடர் ஒன்றால் உணரலாம்.' இவனுக்குப் பிறகு அரசாண்ட மூன்றாம் இராசராச சோழன் இவனுடைய புதல்வன் ஆவன். ஆனால், இவ்வுண்மையை உணர்த்தக்கூடிய கல்வெட்டுக் களாதல் பிற ஆதாரங்களாதல் இதுகாறுங் கிடைக்க வில்லை. எனினும், நம் குலோத்துங்கனுடைய புதல்வனே மூன்றாம் இராசராச சோழன் என்பதில் சிறிதும் ஐயமில்லை. புலவர் பெருமக்கள்

இவ் வேந்தன் தன் முன்னோர்களைப் போல் தமிழ் வளர்ச்சியில் பெரிதும் ஈடுபட்டுத் தன் காலத்தில் நிலவிய புலவர் 1. இவ் விக்கிரம சோழபுரத் தரண்மனையி லிருந்தபோது தான் வேலூர்த் திருமால் கோயிலுக்கு இவன் இறையிலி நிலம் வழங்கினான் என்று கல்வெட்டுக் கூறுகின்றது. (Ins. 114 of 1919)

2. S.I.I.,Vol. III, No. 88; Ibid, Vol. VII, No. 797; Ibid, Vol. V. No. 1359. 3. Ins. 458 of 1913.