உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




168

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 பாடப்பெற்றிருப்பின் பக்திச் சுவை யொழுகும் அவ்வரிய நூலையும் அதனைப் பாடிய ஆசிரியரையும் தாம் இயற்றிய நூல்களில் புகழ்ந்திருப்பர் என்பது திண்ணம். அப்புலவர் பெருமான் தம் நூல்களில் திருத் தொண்டர் புராணத்தைக் குறிப்பிடாமையின் அந்நூல் அவர் காலத்திற்குப் பின்னரே இயற்றப்பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப் படும். சேக்கிழாரடிகள் கூறியுள்ள பேரம்பலம் பொன்வேய்ந்த அனபாயன் மூன்றாங் குலோத்துங்கனே யாவன். இவன் எதிரம்பலம் பொன் வேய்ந்தான் என்று கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.' எதிரம்பலமே பேரம்பலம் என்று வழங்கியது என்பது அறியற் பாலது. எனவே எதிரம்பலம் பொன் வேய்ந்த மூன்றாங் குலோத்துங்கனே பேரம்பலம் பொன் வேய்ந்த அனபாயன் என்பதும் இவன் காலத்தில் விளங்கியவரே சேக்கிழாரடிகள் என்பதும் தெள்ளிதிற் புலனாதல் காண்க. சிறப்புப் பெயர்கள்

4

5

அந்நாளில் இவ் வேந்தருக்குப் பல சிறப்புப் பெயர்கள் வழங்கியுள்ளன. அவற்றுள், வீரராசேந்திரன்,' முடிவழங்கு சோழன், சோழ கேரள தேவன், திரிபுவன வீர தேவன்,° முடித்தலை கொண்ட பெருமாள்,' உலகுடைய வந்த நாயனார், இராசாக்கள் தம்பிரான், உலகுய்யவந்த நாயனார்,10 தனி நாயகன்" என்பன

1.

9

8

ஒட்டக்கூத்தர் தம் தக்கயாகப் பரணியில் கூறியுள்ள திருஞானசம்பந்தர் வரலாற்றிற்கும் சேக்கிழார் கூறும் அவ்வடிகள் வரலாற்றிற்கும் வேறுபாடுகளிருப்பது ஒன்றே அவ் விருவரும் ஒரே காலத்தினர் அல்லர் என்பதை உணர்த்துவதாகும்.

2.S.I.I., Vol. IV, No. 222; Inscriptions of the Pudukkottai State, No. 166.

3. இச் சிறப்புப் பெயர் இவனது இரண்டாம் ஆட்சி யாண்டிலிருந்து 36 ஆம் ஆண்டு முடியக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றது. (ளு.ஐ.ஐ., ஏடிட. ஏஐஐ, சூடி. 88. ஐளே. 323 டிக 1911.) 4. S.I.I., Vol. III, No. 23.

5. Ins. 75 of 1925.

6. Ins. 554 of 1904; Ins. 162 of 1926.

7. Ins. 266 of 1913.

8. Ins. of the Pudukkottai State, No. 169.

9. Ins. 80 of 1928.

10. Ins.120 of 1912.

11. Ins. 147 of 1927.