உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

169

குறிப்பிடத் தக்கனவாம். இவன் கொங்கு நாட்டை வென்று தன்னடிப் படுத்தியமை பற்றிச் சோழ கேரளன் என்றும் தன்பால் அடைக்கலம் புகுந்த கொங்கு மன்னனுக்கு அரசளித்து முடி வழயங்கியமை பற்றி முடிவழங்கு சோழன் என்றும் மக்களால் வழங்கப் பெறுவானாயினன். இவன் ஆட்சியில் கொங்கு நாடு சோழ கேரள மண்டலம் எனவும் இதன் தலைநகராகிய கருவூர் முடி வழங்கு சோழபுரம் எனவும் பெயர்கள் எய்தியமை முன்னர்க் கூறப்பட்டுள்ளது. இவன் திரிபுவன வீரதேவன். முடித்தலைக் கொண்ட பெருமாள் என்ற சிறப்புப் பெயர்கள் பெற்றமைக்குக் காரணம் முன் விளக்கப்பெற்றுள்ளது. தில்லையம்பதியிலுள்ள மேற்கு இராசவீதி முடித்தலை கொண்ட பெருமாள் திருவீதி என்றும் கோயிலுள்ள மூன்றாம் பிரகாரம் இராசாக்கள் தம்பிரான் திருவீதி என்றும் இவன் பெயரால் அக்காலத்தில் வழங்கி வந்தன என்பது சில கல்வெட்டுக்களால்' அறியப் படுகின்றது. சோழ நாட்டில் காவிரி யாற்றிற்கு வடக்கரையி லுள்ள பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகிய திருக்கருப் பறியலூர் என்பது இவ்வேந்தன் பெயரால் தனிநாயக சதுர்வேதி மங்கலம்,2 என்று வழங்கப்பெற்று வந்தமை அவ்வூர்க் கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.

சில நிகழ்ச்சிகள்

இவனது ஆட்சியின் 12, 13ஆம் ஆண்டுகளில் தொண்டை மண்டலத்தில் பெருமழை பெய்தமையால் வெள்ளம் ஏற்பட்டு அங்குப் பெரும் பஞ்சம் உண்டாய செய்தி ஒரு கல்வெட்டால்3 அறியக்கிடக்கின்றது. அன்றியும், வனது ஆட்சியின் 23,

1. S.I.I., Vol, IV. No. 229. Ibid, Vol. XII, Nos. 245 and 154.

2. சீர்காழிக்கு மேற்கேயுள்ள இவ்வூர் இந்நாளில் தலைநாயிறு என்று வழங்கப்படுகிறது. 3. S.I.I., Vol. VII, No. 393. "மதுரையும் ஈழமுங் கொண்டருளின ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 44 வது சோமங்கலமான பஞ்சநதி வாண சதுர்வேதிமங்கலத்து ஏரி இத்தேவர்க்குப் பன்னிரண்டாவது பெருவர்ஷம் பெய்து ஒரு நாளே ஏழிடத்தில் பெருமடையாக உடைந்த இது திருச்சுரக் கண்ணப்பன் திருவேகம்பம்முடையான் காமன் கண்ட வானவன் இம்மடை ஏழும் அடைப்பித்து பதின்மூன்றாவதும் ஏரி நிறைந்த இரண்டிடத்தில் உடைந்ததுவும் அடைப்பித்து இவ்வேரி பதினாலாவது நிலைநின்ற பின்பு இம் மடைகளும் கரையும் பருமை செய்கைக்கு பதினாலாவது தைமாசத்து திருச்சுரக் கண்ணப்பன் திருவேகம்ப முடையான் பக்கல் இவ்வூர் மகாசபை யோம் பொலியூட்டாகக் கைக்கொண்ட பழங்காசு 40

99