உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

171

துறவிகளின் குகைகள் மறுபடியும் சிறந்து விளங்கின என்பது கல்வெட்டுகளால் வெளியாகின்றது.'

இனி, இவ்வேந்தன் ஆட்சியில் நிகழ்ந்த செயல்களுள் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது இவனது 38ஆம் ஆட்சியாண்டில் சோழ நாடு அளக்கப்பெற்றமையே யாம். இந் நிகழ்ச்சியைத் தெளிவாக விளக்கக் கூடிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை யாயினும் மூன்றாம் இராஜேந்திர சோழனது கோயிலூர்க் கல்வெட்டொன்று' இச்செய்தியை யுணர்த்துவது அறியத்தக்கது. குலோத்துங்கனது இறுதிக்காலம்

இவனது ஆட்சியின் 40ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள், கைச்சினம், ஊட்டத்தூர், திருவரன்குளம் ஆகிய ஊர்களில்3 காணப்படுதலால், இவன் நாற்பது ஆண்டுகள் வரையில் ஆட்சி புரிந்திருத்தல் வேண்டும் என்பது நன்குணரக்கிடக்கின்றது. எனவே, இவன் கி. பி. 1218-ஆம் ஆண்டு சிவபெருமான் திருவடி நிழலை எய்தியிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவன் தான் இறப்பதற்கு இரண்டாண்டுகட்கு முன்னர் கி. பி. 1216 ஆம் ஆண்டில் தன் புதல்வன் மூன்றாம் இராசராசனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி அரசாங்க அலுவல்களில் கலந்து கொள்ளுமாறு செய்தனன். இவன் கி. பி. 1218-ல் இறந்த பின்னர் இராசராசன் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாக முடிசூட்டப் பெற்ற சில திங்கள்களில், அவனது ஆற்றலின்மையை நன்குணர்ந்த முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் என்பான் தன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டாகிய கி. பி. 1129-ல் சோழ நாட்டின்மீது படை யெடுத்து வந்து அதனைக் கைப்பற்றிக் கொண்டான். இந்நிகழ்ச்சி நம் குலோத்துங்கனது ஆட்சியின் இறுதியில் நிகழ்ந்த தென்றும் அப் பாண்டி வேந்தன் பால் பொன்னமராவதியில் அடைக்கலம் புகுந்து தனக்குரிய சோழ நாட்டை மீண்டும் பெற்றுக் கொண்டவன் இவனே என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் 1. Ins.477 of 1912; ARE for 1909, part II.

2. Ins. 188 of 1908.

3. Ins. 162 of 1926; Ins. 489 of 1912; Inscriptions of the Pudukkottai State, No. 176.

4. Ep. Ind., Vol. VIII, page 260.