உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

175

திருவண்ணாமலைத் தாலுகாவிலுள்ள செங்கைமாக் கோயிலில் வரையப்பெற்றுள்ளது.'

5. அமராபரண சீயகங்கன்:

3

இவன் கங்கர் மரபினன்; இந்நாளில் கோலார் என்று வழங்கும் குவளாலபுரத்தைத் தன் தலைநகராகக் கொண்டு கங்கபாடி நாட்டை ஆட்சிபுரிந்த ஒரு குறுநில மன்னன். இவனைக் 'குவளாலபுர பரமேஸ்வரன் கங்க குலோத்தமன் சூர நாயகன் திருவேகம்ப முடையானான அமரா பரண சீயகங்கன்' என்று கல்வெட்டுக்கள் கூறுவது' குறிப்பிடத்தக்கது. இவன் கல்வெட்டுக்கள் குலோத்துங்கனது மூன்றாம் ஆட்சி யாண்டு முதல் 34-ம் ஆண்டு முடிய நம் தமிழகத்தில் காணப் படுகின்றன. இவன் பட்டத்தரசி அரியபிள்ளை என்பாள் கி. பி. 1212-ல் திரு வல்லத்திலுள்ள சிவன் கோயிலில் இரண்டு சந்தி விளக்குகள் எரித்ததற்கு நிவந்தம் அளித்துள்ளமை அவ்வூர்க் கல்வெட்டால்" அறியப்படுகின்றது. கி. பி. 1181-ல் இவன் புதல்வன் அருங்குன்றைப் பிள்ளையான சீயகங்கன் என்பான் திருக்காளத்தி இறைவர்க்கு ஒரு நுந்தா விளக்கு எரித்தற் பொருட்டுச் சாவா மூவாப் பசுக்கள் அளித்தனன் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகின்றது; இவ் வமராபரண சீயங்கனும் திருக்காளத்தி, காஞ்சி ஆகிய ஊர்களிலுள்ள திருக்கோயில்களில் நுந்தா விளக்குகள் வைத்துள்ளனன். எனவே, இவனும் இவன் குடும்பத்தினரும் சிறந்த சிவபக்தியுடையவர்களா யிருந்தனர் என்று தெரிகிறது. இவன் கன்னட மொழி வழங்கும் நாட்டில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தவனாயினும் இவன் தமிழ் மொழியிலும் பெரும் பற்றுடையவனாயிருந்தமை அறியத் தக்கது. இவன் தன் நாட்டிலிருந்த அரிய புலவராகிய பவணந்தி முனிவரைக் கொண்டு நன்னூல் என்ற இலக்கண நூல் ஒன்று இயற்றுவித்த செய்தி முன்னர் விளக்கப்பட்டுள்ளது.

5

1. S.I.I., Vol. VII, Nos. 127 and 119.

2. Ibid, Vol. IV, No. 823; Ins. 116 of 1922.

3. Ibid. No. 643; Ins. 116 of 1922.

4. S.I.I., Vol. III, No. 62.

5. S.I.I.. Vol. VIII, No. 149.