உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




174

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

ஒரு பகுதியை ஆட்சி புரிந்தவன்; இரண்டாம் இராசாதிராசன் மூன்றாங் குலோத்துங்கன் ஆகிய இரு வேந்தர் ஆட்சிக்குப் படைத் தலைவர்களாக நிலவிய வீரர்களுள் ஒருவன். இவன், இராசாதிராசன் ஆட்சியில் திருச்சிற்றம்பல முடையான் பெருமானம்பிப் பல்லவராயனோடு பாண்டி நாடு சென்று, ஈழ நாட்டுப்படையுடன் போர் புரிந்து வாகை சூடியவன் என்பது இலங்கைச் சரிதமாகிய மகா வம்சத்தால் உய்த்துணரப்படு கின்றது.

3. அதிகமான் இராசராச தேவன்:

வன் கடையெழு வள்ளல்களுள் ஒருவனும் கடைச்சங்க காலத்திலிருந்தவனு மாகிய அதிகமான் நெடுமானஞ்சியின் வழித்தோன்றல்; சேரர் மரபினன்; கங்க நாட்டிலுள்ள தகடூரி லிருந்து அந்நிலப் பரப்பை அரசாண்ட ஒரு குறுநில மன்னன். இவனது தலைநகராகிய தகடூர் இந்நாளில் தர்மபுரி என்ற பெயருடன் சேலம் ஜில்லாவில் உளது. இவன், திருவண்ணா மலைக் கோயிலுக்குத் தகடூர் நாட்டிலுள்ள மலையனூர் என்ற ஊரை இறையிலியாக வழங்கியுள்ளனன் என்பது அக்கோயிலில் காணப்படும் கல்வெட்டொன்றால்' அறியப்படுகின்றது.

4. விடுகாதழகிய பெருமாள்:

இவன் மேலே குறிப்பிட்ட அதிகமான் இராசராச தேவனுடைய புதல்வன். சேலம் ஜில்லாவிலுள்ள கம்பயனல்லூரில் காணப்படும் ஒரு கல்வெட்டால் இவன் நம் குலோத்துங்கனுக் குட்பட்டிருந்த ஒரு குறுநில மன்னன் என்பது நன்கு புலனாகின்றது. இவன் கல்வெட்டுகள் தென்னார்க்காடு, வடார்க்காடு ஜில்லாக்களிலும் உள்ளன. இவனும் கரிகால சோழ ஆடையூர் நாடாழ்வானும் செங்கேணி அம்மையப்பன் அத்திமல்லனான விக்கிரம சோழச் சாம்புவராயனும் தம்முள் ஒற்றுமையுடையவர்களாயிருத்தல் வேண்டும் என்று செய்து கொண்ட உடன்படிக்கை யொன்று

1. Ep. Ind, Vol. VI, pp. 332 - 334. 2.S.I.I.,Vol. VIII, No. 126.

3. Ep. Ind., Vol. VI, pp. 332 - 334.