உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

177

சோழச் சம்புவராயன்' என்பவர் களும் நம் குலோத்துங்கன் காலத்தில் இருந்தவர்கள் என்பது சில கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது.

2

3

7. ஏகவாசகன் குலோத்துங்க சோழ வாண கோவ ரையன்: இவன் வாணர் மரபில் தோன்றியவன்; குலோத்துங்கன் காலத்தில் நிலவிய அரசியல் தலைவர்களுள் ஒருவன். இவன் கல்வெட்டுக்கள் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம் ஜில்லாக் களில்" குலோத்துங்கனது ஆட்சிக் காலம் முழுமையும் காணப்படு வதால் இவன் அக்காலத்தில் அரசாங்கத்தில் விளங்கிய ஒரு சிறந்த தலைவன் என்பது தெள்ளிது.

8. பொன் பரப்பினான் மகதைப் பெருமாளான இராச ராச வாணகோவரையன்:

இவன் வாணர் மரபில் தோன்றிய ஒருகுறு நில மன்னன்; சேலம் ஜில்லாவிலுள்ள ஆறகழூரைத் தலைநகராகக் கொண்டு மகத நாட்டை அரசாண்டவன். இவனது மகத நாடு சேலம் ஜில்லாவின் கீழ்ப்பகுதியும் தென்னார்க்காடு ஜில்லாவின் மேற் பகுதியும் தன்னகத்துக் கொண்டு முற்காலத்தில் நிலவிய ஒரு நிலப் பரப்பாகும். இவ் வாண கோவரையன் திருவண்ணா மலைக் கோயிலைப் பொன் வேய்ந்த காரணம் பற்றிப் 'பொன் பரப்பினான் மகதைப் பெருமாள்' என்று அந்நாளில் வழங்கப் பெற்றுள்ளான்.' அக் கோயில் சுவர்களில் இவனுடைய அறச் செயல்களையும் வீரச் செயல்களையும் கூறும் இருபத்திரண்டு பாடல்கள் வரையப் பெற்றிருத்தலை இன்றும் காணலாம்.6 இவன் நம் குலோத்துங்கனுக்குச் சில போர் நிகழ்ச்சிகளில் படைத்தலைவனா யிருந்தனன் என்று தெரிகிறது.

1. S.I.I., Vol. VII, No. 103.

2. Ins. 166 of 1908.

3. Ins. 521 of 1912; S.I.I., Vol. IV, No. 396.

4. Ins. 461 of 1913.

5. S.I.I.,Vol. VIII, No. 148.

6. Ibid, No. 145; செந்தமிழ்த் தொகுதி - 3, பக்கங்கள் 427 – 432.