உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




178

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

9. கூடலூர் அரச நாராயணன் ஆளப்பிறந்தான் வீர சேகரக் காடவராயன்:

இவன் பல்லவர் மரபில் தோன்றிய ஒரு தலைவன்: தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள கூடலூர் என்ற நகரில் வாழ்ந்து கொண்டிருந்தவன்; குலோத்துங்கன் ஆட்சியில் திருமுனைப்பாடி நாடு எனப்படும் நடு நாட்டில் பாடிகாவல் அதிகாரியாய் விளங்கியவன். திருவதிகை, திருவெண்ணெய் நல்லூர், திருமாணிகுழி, திருவண்ணாமலை, எலவானாசூர், சித்தலிங்கமடம் ஆகிய ஊர்களில் இவன் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அவற்றால் அவ்வூர்க் கோயில்களுக்கு

இவன்

அளித்துள்ள நிவந்தங்களும் அணிகலன்களும் செய்துள்ள திருப்பணிகளும் நன்கு புலனாகின்றன.

10. கூடல் ஏழிசைமோகன் மணவாளப் பெருமாள் வாணிலை கண்ட பெருமாளாகிய இராசராசக் காடவ ராயன்:

இவன், மேலே குறிப்பிட்ட பல்லவர் குலத் தலைவன் வீரசேகரக் காடவராயனுடைய புதல்வன்; தன் தந்தைக்குப் பிறகு திருமுனைப்பாடி நாட்டில் நாடு காவல் அதிகாரியா யிருந்தவன், குலோத்துங்கன் நிகழ்த்திய போர் ஒன்றில், வாள் கொண்டு பேராண்மையுடன் பொருது பகைவனை வென்று வாகை சூடிய காரணம் பற்றி அரசனால் வாணிலை கண்ட பெருமாள் என்ற பட்டம் வழங்கிப் பாராட்டப் பெற்றவன். இவனுடைய போர் வீரத்தையும் பேராற்றலையும் உணர்ந்த நம் குலோத்துங்கன் அவனுக்குத் தன் மகளை மணஞ் செய்து கொடுத்துப் பற்பல சிறப்புகள் செய்தான். அந்நாள் முதல் இவன் மணவாளப் பெருமாள் என்று சோழ இராச்சியத்தில் யாண்டும் வழங்கப் பெற்றனன் என்று தெரிகிறது. இவனுக்கு

1. S.I.I., Vol. VII, No. 941; Ibid. Vol. VIII, No. 121. 2.S.I.I.,Vol. VII, No. 942. Ibid, No. 146.

3. சுந்தரத் தோரண நாட்டித் துகிற்கொடி சூட்டி முத்துப் பந்தர பாலிகை தீபம் பரப்புமின் பல்லவர்கோன் செந்தளிர்க் கைகோத் தபயன் மகளுடன் தில்லையுலா வந்தளிக்கும்பெருமாள் வெற்பர் மாதை மணஞ்செய்யவே (S.I.I., Vol. XII, Intro. p. 10.)

3