உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3

முதற்பதிப்பின் முகவுரை

பிற்காலச்சோழர் சரித்திரத்தின் இரண்டாம் பகுதியாகிய இந்நூல், கி.பி. 1070 முதல் கி.பி. 1279 வரையில் சோழ இராச்சியத்தில் சக்கரவர்த்திகளாக வீற்றிருந்து அரசாண்ட சோழர்களின் வரலாற்றைக் கூறுவதாகும். முதற் குலோத்துங்க சோழன் முதலாக மூன்றாம் இராசேந்திரசோழன் இறுதியாக உள்ள சோழ மன்னர் எண்மர் வரலாறுகளை இந்நூலில்

காணலாம்.

இ வ்வேந்தர்களுடைய மெய்க்கீர்த்திகளும், இவர்களைப் பற்றிய பழைய பாடல்களும், இன்னோரின் மரபு விளக்கமும், கி.பி.10, 11-ஆம் நூற்றாண்டுகளில் சோழர்கட்கும் கீழைச் சளுக்கியர்கட்கும் ஏற்பட்டிருந்த மணத்தொடர்பு விளக்கமும் இந்நூலின் இறுதியில் சேர்க்கைகளாக வெளியிடப்பட்டிருக் கின்றன.

இந்நூலை எழுதி முடித்தற்கு யான் ஆதாரமாகக் கொண்டவையாவை என்பதையும், பிறசெய்திகளையும் முதற்பகுதியின் முகவுரையில் அறிவித்துள்ளேன். பிற வரலாற்றா ராய்ச்சியாளர்க்கும், எனக்கும் கருத்து வேறுபாடுகள் நிகழும்

டங்களில் தக்க சான்றுகளுடன் ஆராய்ந்து என் முடிவுகளை நிறுவியுள்ளேன். சரித்திர நூல்களில் சில இடங்களில் கருத்து வேறுபாடுகள் உண்டாதலும், எதிர்காலத்தில் கிடைக்கும் ஆதாரங்களால் சில செய்திகள் மாறுபடுதலும், காலக் குறிப்புகள் வேறுபடுதலும் இயல்பாகுமென்பது அறிஞர்கள் நன்குணர்ந்ததேயாம்.

இத்தகைய ஆராய்ச்சி நூல்கள் நம் தமிழ்மொழியில் வெளி வருவதற்கு வேண்டுந்துணை புரிந்துவரும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாளர் டாக்டர் S.G. மணவாள ராமாநுஜம், M.A., Ph.d. அவர்கட்கும், தமிழ்ப் பேராசிரியர் திருவாளர் டாக்டர் A. சிதம்பரநாதச் செட்டியார், M.A., Ph.D, அவர்கட்கும்,