உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 பல்கலைக்கழக ரிஜிஸ்ட்ரார் திருவாளர் S. சச்சிதானந்தம் பிள்ளை, B.A., L.T. அவர்கட்கும் என்றும் நன்றியுடையேன்.

'புரூப்' திருத்தி உதவிய தமிழாராய்ச்சித்துறை விரிவுரையாளர் வித்வான் திரு.க. வெள்ளைவாரணனார், சொற் குறிப்பு அகராதியினைத் தொகுத்துதவிய சிதம்பரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் திரு. T.S. நடராஜக் குருக்கள், B.A., L.T., வரலாற்றுப் படம் வரைந்துதவிய ஆசிரியர் திரு.கூ.ஆ. சம்பந்த நாயகர் ஆகிய மூவரையும் என்றும் மறவேன். இப்புத்தகத்துக்கு வேண்டும் நிழற்படங்கள் சிலவற்றை வெளியிட உதவிய இந்தியப் பழம்பொருள் ஆராய்ச்சித்துறைத் தலைவர்க்கும், புதிய நிழற் படங்களை எடுத்துத் தந்த சிதம்பரம் கெம்பு ஸ்டுடியோ நிலையத்தார்க்கும், இந்நூலை வனப்புற அச்சிட்டுதவிய சிதம்பரம் பாண்டியன் அச்சகத்தார்க்கும் எனது நன்றியுரியதாகும்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை நகர்

6.1.51

இங்ஙனம்

T.V.சதாசிவப் பண்டாரத்தார்