உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




LO

5

இரண்டாம் பதிப்பின் முகவுரை

இச்சரித்திர நூலின் முதற்பதிப்பு இற்றைக்கு ஆறு ஆண்டுகட்குமுன் வெளிவந்தது, முதற்பதிப்புப் புத்தகங்கள் செலவாகி விட்டமையாலும், பல்கலைக் கழகத் தேர்விற்குப் பயின்று கொண்டிருக்கும் மாணவர்கட்கு இந்நூல் பாடமாக இருத்தலும், இவ்விரண்டாம் பதிப்பு இப்போது வெளியிடப் பட்டுள்ளது. பின்னிகழ்ந்த எனது ஆராய்ச்சிகளில் அறிந்த செய்திகளும், இப்பதிப்பில் உரிய இடங்களில் சேர்க்கப் பெற்றுள்ளன. அன்றியும் ஆராய்ச்சிக்கு இன்றியமையாதன வாகக் கருதப்படும் சில வரலாற்றுக் கல்வெட்டுக்களும் இறுதியில் சேர்க்கை ஏ ஆகத் தரப்பெற்றுள்ளன.

இதனை இரண்டாம் பதிப்பாக வெளியிட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார்க்கும், இஃது அச்சாகுங்கால் அன்புடன் ‘புரூப்' திருத்தி உதவிய என் அரிய நண்பர் தமிழாராய்ச்சிக்த் துறை விரிவுரையாளர் வித்வான் க.வெள்ளைவாரணர் அவர்கட்கும் எனது நன்றி உரியதாகும்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை நகர்

6.1.51

இங்ஙனம்

T.V. சதாசிவப் பண்டாரத்தார்