உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

இராசராசன் ஆட்சியின் சமயநிலை

199

இவன் தந்தையின் ஆட்சிக் காலம் போலவே இவன் காலத்திலும் சைவ சமயம் உயர் நிலையில் இருந்தது என்பது இவன் காலத்துக் கல்வெட்டுக்கள் எல்லாச் சிவன் கோயில் களிலும் மிகுதியாக உள்ளமையால் நன்குணரக் கிடக்கின்றது. வணவம், சைனம் முதலான சமயங்களையும் இவன் தன் முன்னோர்களைப் போல் ஆதரித்துள்ளனன். ஆகமத் தொடர் புடைய சைவ மடங்களும், பாசுபதம், காபாலிகம் முதலான அகச்சமய மடங்களும், இவன் காலத்தில் சோழ இராச்சியத்தில் யாண்டும் பரவியிருந்தன. இவன் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த ஓர் அரிய செயல், சித்தாந்த சாத்திரங்களுக் கெல்லாம் முதனூலாக வுள்ள சிவஞான போதம் என்ற ஒப்பற்ற நூல் திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவரால் எழுதப்பெற்றமையேயாம். திருவண்ணாமலையிற் காணப்படும் கல்வெட்டொன்று,1 கி.பி.1232-ல் திருவெண்ணெய்நல்லூ ருடையார் மெய்கண்ட தேவர் என்பார் செங்குன்றநாட்டு மாத்தூராகிய இராசராச நல்லூரில் மெய்கண்டீச்சுரமுடைய சிவபெருமானை எழுந்தருளு வித்து வழிபாட்டிற்கு நிவந்தமாக இறையிலி நிலம் அளித்தனர் என்றும் அவ்வூரிலேயே மெய்கண்ட தேவப் புத்தேரி என்ற ஏரி ஒன்று அமைத்தனர் என்றும் கூறுகின்றது. இக்கல்வெட்டு வரையப்பெற்ற காலம் இதில் சொல்லப்படும் பெரியாரின் பெயர், அவருடைய ஊர், அவர் புரிந்துள்ள அறச் செயல்கள் ஆகியவற்றை ஆராயு மிடத்து, அவரே தமிழ் மொழியில் சிவஞானபோதம் இயற்றிய அறிஞர் பெருமானாக இருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும்.

ராசராசன் மனைவியரும் புதல்வனும்

இராசராசனுடைய பட்டத்தரசி புவனமுழுதுடையாள் எனப்படுவாள். இவ்வரசியை 'வாணர்குல நிலைவிளக்கு' எனவும், 'இயல்வாழவும் இசைவாழவும் இமயமலை மகளறத்தின் - செயல் - வாழவும் ராஜராஜன் திருத்தாலி பெற்றுடையார்' எனவும் இவ்வேந்தன் மெய்க்கீர்த்தி குறிப்பிடுவதால், இவள் மகத

1.S.I.I., Vol. VII, No. 74. இக் கல்வெட்டில் குறிக்கப் பெற்ற காலம் கி. பி. 1232, மே, 11 ஆகும்.