உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




198

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

விளக்கப்பட்டுள்ளது. காஞ்சிமா நகரிலுள்ள அருளாளப் பெருமாளுக்கு வீர நரசிம்மன் படைத் தலைவர் களுள் அம்மண்ண தண்டநாயகன் என்பான்கி. பி. 1230-ல் திருவிளக்கிற்கு நிவந்தமும் கொப்பைய தண்டநாயகன் என்பான் கி.பி. 1231-ல் திரையாலம் என்ற ஊரும் வழங்கிய செய்திகள் அங்குள்ள கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. அங்ஙனமே வீரநர சிம்மன் புதல்வனான வீரசோமேசுரன் படைத்தலைவர்களுள் இருவர்,கி.பி. 1236, 1238-ஆம் ஆண்டுகளில் காஞ்சி அருளாளப் பெருமாளுக்கு நிவந்தம் அளித்துள்ளமை சில கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. கி. பி. 1240-ல் கொப்பைய தண்ட நாயகன் உடன் பிறந்தோனான மல்லய தண்ட நாயகன் என்பவன் அப்பெருமாளுக்குத் திருவிளக்கிற்கு நிவந்தம் அளித்த செய்தியை அக்கோயிற் கல்வெட்டொன்று" கூறுகின்றது. இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்குங்கால், இராசராசன் ஆட்சிக் காலத்தில் போசளத் தண்டநாயகர்களின் தலைமையில் பெரிய நிலைப்படை யொன்று காஞ்சிமாநகரில் போசள மன்னர்களால் வைக்கப் பெற்றிருத்தல் வேண்டு மென்பது நன்கு புலனாதல் காண்க. இவனது ஆட்சியின் பிற்பகுதியில் சோழ இராச்சியத்திலிருந்த சிற்றரசர்களான கோப்பெருஞ்சிங்கன், வாணகோவரையன், சேதிராயன், சம்புவராயன் என்போர் இவ் வேந்தனுக்கு அடங்காமல் முரண் பட்டுப் போயினமையால், இவனைப் பாதுகாத்தற்கு வந்த போசள மன்னர்கள் இத்தகைய நிலைப் படையொன்றைத் தம் படைத் தலைவர்களின் கீழ் அப்பெரு நகரில் அமைப்பது இன்றியமையாததாயிற்று எனலாம். போசளர்களின் கல்வெட்டுக்கள் திருமழபாடி, திருகோகர்ணம் முதலான ஊர்களில் காணப்படு வதால் அன்னோர் சோழ நாட்டில் மிக்க ஆதிக்கம் எய்தி வந்தனர் என்று தெரிகிறது.

1. Ins. 408 of 1919.

2. Ins. 404 of 1919.

3. Ins. 366 of 1919; Ins. 369 of 1919.

4. Ins. 611 of 1919.

5. Ins. 39 of 1920; Inscriptions of the Pudukkottai State, No. 183.