உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

197

காசுகளுக்கு விற்று, அதனைச் சேக்கிழான் வயிராதராயன் என்ற அதிகாரி அரசாங்கக் கருவூலத்தில் சேர்ப்பித்தனன் என்று தெரிவிக்கின்றது. கும்பகோணத்திற் கண்மையிலுள்ள சிவபுரத்தில் கி. பி. 1239-ல் எழுதப்பட்டுள்ள கல்வெட்டொன்று அவ்வூர் கோயிலைச் சேர்ந்த இரண்டு சிவப்பிராமணர்கள் புரிந்த சிவத்துரோக இராசத் துரோகக் குற்றங்களைச் சிறிது விரித்துரைக் கின்றது. அஃது அவர்கள் இருவரும் சிவபுரத் தெழுந்தருளியுள்ள இறைவியின் அணிகலன்களைத் கவர்ந்து தம் காதற் பரத்தைக்குக் கொடுத்தும் தம்மிடம் அளிக்கப்பட்டிருந்த கோயிற்குரிய நிவந்தப் பொருளை வேறு வகையில் செலவிட்டும், தம் நிலத்திற்குரிய அரசாங்க வரியைக் கொடாமல் மறுத்தும், மற்றும் பல வழி களில் தவறாக நடந்தும், அரசனது ஆணைக்குக் கீழ்ப்படியாமல் அரசாங்க அலுவலாளரை அடித்தும், கன்னட வீரர்களோடு சேர்ந்துகொண்டு மக்களைச் சொல்லமுடியாத துன்பங்களுக் குள்ளாக்கி அவர்களிடமிருந்து ஐம்பதினாயிரம் காசுகள் வசூலித்தும், பல்வகைக் குற்றங்கள் புரிந்தனர் என்று கூறு கின்றது. அன்றியும், அக்கல்வெட்டு அவர்கள் தாம் இழைத்த அத்துணைச் சிவத் துரோக இராசத் துரோகக் குற்றங்களுக்காக மாகேச்சுரராலும் ஊர்ச் சபையாராலும் தண்டிக்கப்பட்டனர் என்று உணர்த்துகின்றது. சிவபுரக் கல்வெட்டில் காணப்படும்

ச்செய்திகளால் அந்நாளில் எவ்வகைக் குற்றங்கள் சிவத் துரோக இராசத் துரோகங்களாகக் கருதப்பட்டுள்ளன என்பதை ஒருவாறு அறிந்துகொள்ளலாம். ஈண்டுக் குறிப்பிடப்பெற்ற சீகாழி, வலிவலம், திருவெண்காடு, கோயில் திருமாகாளம், சிவபுரம் ஆகிய ஊர்களெல்லாம் சோழ நாட்டில் தஞ்சாவூர் ஜில்லா விலுள்ளவை என்பது யாவரும் அறிந்ததேயாம்.

ராசராசன் ஆட்சியில் போசளர் நிலை

இவ் வரசற்கு உற்றுழி யுதவவேண்டிப் போசள மன்னனும் அவன் படைத்தலைவர்களும் ஆற்றல் வாய்ந்த பெரும் படை களுடன் சோழ நாட்டிற்கு அடிக்கடி வர நேர்ந்தமை முன்னர்

1. Ins. 297 of 1927; Annual Report on South Indian Epigraphy for 1927, part II, para 30.