உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




196

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

நிகழ்த்திய படை யெழுச்சிகளும், சுயேச்சையாய்த் தனியரசு புரியக் காலம் கருதிக்கொண்டிருந்த பல்லவர் குலத்தலைவன் முதல் கோப்பெருஞ்சிங்கனும் மகத நாட்டுக் குறுநில மன்னன் வாணகோவரையனும் நிகழ்த்திய கலகங்களும் பொதுவாக மக்கள் வாழ்க்கையில் அச்சத்தையும் அமைதியின்மையையும் உள்நாட்டில் உண்டுபண்ணிவிட்டன. அன்றியும், அந்நிகழச்சி களால் சோழ நாட்டில் இராசத் துரோகம், சிவத்துரோகம், நாட்டுத் துரோகம் ஆகிய குற்றங்கள் மிகுந்துவிட்டன என்பது ஆங்காங்கு காணப்படுங் கல்வெட்டுக்களால் நன்கறியக் கிடக்கின்றது. அக் குற்றங்கள் கல்வெட்டுகளில் குறிப்பாகக் கூறப்பட்டிருத்தலால் அவற்றின் இயல்பினைத் தெளிவாக அறிய இயலவில்லை. இராசராசனது ஆட்சியின் எட்டாம் ஆண்டாகிய கி. பி. 1224-ல் சீர்காழியில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டொன்று' சில இராசத் துரோகிகளின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதற்காக நியமிக்கப்பெற்ற அரசாங்க அதிகாரிகளால் பெருவிலையில்' விற்கப்பட்டன என்று கூறுகின்றது; வலிவலத்தில் காணப்படும் கல்வெட் டொன்றுå எட்டு அரசியல் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவினர், கி. பி. கி.பி. 1230-ல் இராசத் துரோகத்துக்குள்ளாயினார். நிலங்கள் எல்லா வற்றையும் பிடுங்கிப் பெருவிலையில் முப்பத்து மூவாயிரம் காசுகளுக்கு விற்றனர் என்று உணர்த்துகின்றது. திருவெண் காட்டிலுள்ள கல்வெட்டொன்று கி. பி. 1234-ல் இராசத் துரோகக் குற்றத்திற்காகப் பொருள் பறிமுதல் செய்யப்பெற்ற செய்தியை அறிவிக்கின்றது. கோயில் திரு மாகாளத்தில் பொறிக்கப் பட்டுள்ள ஒரு கல்வெட்டு. சில இராசத் துரோகிகளுக்குரிய ஐந்து வேலி நான்கு மா நிலங்களும் அரசாங்க ஆணையின்படி கி.பி.1237-ல் பிடுங்கிப் பெருவிலையில் பதின்மூவாயிரம்

1. Ins. 393 of 1918.

து

5

4

2. பெருவிலை என்பது இந்நாளில் ஏலம் என்று வழங்கப்படுகிறது. இத்தொடர் அவ்வப்போது ஆட்சி புரிந்த அரசன் இயற்பெயரோடு இணைத்து 'இராசராசப் பெருவிலை' என்று அந்நாளில் வழங்கப்பெற்றுள்ளமை கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது.

3. Ins. 112 of 1911.

4. Ins. 506 of 1918.

5. Ins. 244 of 1917; Ins. 246 of 1917.