உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

195

னோடு போர் புரிந்தமையும் உணர்த்துகின்றன. எனவே, சோழநாடு பாண்டிய ராச்சியத்திற்குள் அடங்கி அதில் ஒடுங்கி போகாதவாறு சுந்தரபாண்டியனை வென்று, அந்நாட்டைக் காப்பாற்றி அது முன்போலவே சோழ மன்னனது ஆட்சியின்கீழ் ஒரு தனி நாடாக நிலவும்படி செய்த பெருமை வீர நரசிம்ம னுக்கே உரியது எனலாம். இராசராசனுக்குப் பிறகு சோழ நாட்டில் ஆட்சி புரிந்த மூன்றாம் இராசேந்திர சோழன், வீரநரசிம்மன் புதல்வன் வீரசோமேசுவரனை 'மானன்' என்று தன் கல்வெட்டுக்களில்' குறித்திருத்தலால் நம் இராசராசன் அவ் வீர நரசிம்மன் புதல்வியை மணந்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிதிற் புலனாகின்றது'. ஆகவே, இத்தகைய தொடர்பு ஏற்பட்டிருந்தமையால்தான் இராசராசனுக்குப் போசள மன்னர்களின் பேருதவி அடிக்கடி கிடைத்துவந்தது என்பது ஒருதலை.

.

ராசராசன் ஆட்சியில் சோழ இராச்சியத்தின் பரப்பும் உள்நாட்டுக் குழப்பமும்

வ்வேந்தன் கல்வெட்டுக்கள் தென்னார்க்காடு, வடார்க் காடு, செங்கற்பட்டு, சேலம், சித்தூர், கடப்பை, நெல்லூர் ஆகிய ஜில்லாக்களில் காணப்படுவதால், இவன் தந்தையின் ஆட்சிக்குட் பட்டுச் சோழ ராச்சியத்திலிருந்த நாடுகளுள் பாண்டி நாடு ஒன்று நீங்க, பிற நாடுகள் எல்லாம் இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன எனலாம். எனினும், சிற்றரசர்களுள் பலர் இவனைப் பெயரளவில் தம் சக்கரவர்த்தியாகக் கொண்டு தம்மனம் போனவாறு நடந்து வந்தனர் என்று தெரிகிறது. எனவே, அன்னோர் சுயேச்சை யெய்தித் தாம் தனியரசு புரிதற்கு அடிகோலிக் கொண்டிருந் தனர் என்பது தெள்ளிது. முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் சோழ நாட்டின் மேல் இருமுறை

1. S.I.I., Vol. IV, No. 512; Ins. 117 of 1936-37.

2.

கி. பி. 1238-ல் பட்டம் பெற்ற இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் என்பான் போசள மன்னனாகிய வீர சோமமேசுவரனை இங்ஙனமே தன் மாமடி என்று திருநெல்வேலியி லுள்ள ஒரு கல்வெட்டில் குறிப்பிட்டிருப்பது அறியற்பாலதாகும். (Ep. Ind., Vol. XXIV, No. 22; S.I.I., Vol. V, No. 448.) எனவே, இச் சுந்தர பாண்டியன் தந்தையும் நம் இராசராசனைப் போல் வீர நரசிம்மன் புதல்வியருள் ஒருத்தியை மணந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அப் பாண்டியன் யாவன் என்பது இப்போது புலப்படவில்லை.