உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

1

201

வாணகோவரையனும் வ்வேந்தற்குப் பகைஞராகி முரண் பட்டமையும் அதுபற்றி அவர்களைப் போசள வீர நரசிம்மன் வென்றடக்க நேர்ந்தமையும் முன்னர் விளக்கப்பட்டுள்ளன. எனினும், அவ்விருவரும் முரண்பட்ட நிலையில்தான் இருந்து வந்தனர். பிறகு, தொண்டை மண்டலத்திலிருந்த பல்லவர் குலத் தலைவன் சம்புவராயன் என்பவனும் தன் தாயத்தினனாகிய கோப்பெருஞ்சிங்கனோடு சேர்ந்துகொண்டு அவன் விருப்பத்திற் கேற்ப நடக்கத் தொடங்கினான். அந்நிலையில், இராச ராசன்பால் பன்னாட்களாகப் பேரன்புடன் ஒழுகி வந்த மலையமானாட்டுச் சிற்றரசன் இராசராச சேதிராயனுக்குக் கோப்பெருஞ்சிங்கன் தன் மகளை மணஞ் செய்து கொடுத்து அவனையும் தன்னோடு சேர்த்துக்கொண்டான். எனவே, காடவராயனாகிய கோப் பெருஞ்சிங்கன், வாணகோவரையன், சம்புவராயன், சேதிராயன் என்ற குறுநில மன்னர்கள் இராச ராசன் ஆட்சியின் இறுதிக் காலத்தில் முரண்பட்டிருந்தமை தெள்ளிது. ஆயினும் அத்தலைவர்கள், இராசராசனுக்குக் கீழ்ப் படிந்த சிற்றரசர் களாகவே கல்வெட்டுக்கள்' வரைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. நெல்லூரிலிருந்து ஆட்சி புரிந்து கொண்டி ருந்த முதல் திக்கன் என்ற விசய கண்ட கோபாலனும்' சித்தூர் ஜீல்லா விலிருந்த புடொலியரசனும் வீர நரசிங்க தேவ திருக்காளத்தி தேவனாகிய யாதவராயனும் இராசராசன் ஆட்சிக்குட் பட்டிருந்த தெலுங்கச் சிற்றரசர் ஆவர். அவர்கள் இராசராசனது இறுதிக் காலம் வரையில் இவன்பால் அன்புடன் ஒழுகி வந்தமை அறியற்பாலதொன்றாம்.

4

ம்

5

1. Ins. 480 and 481 of 1921.

2. S.I.I., Vol. VIII, No. 94; Ins. 566 of 1919; S.I.I., Vol. VIII, Nos. 87 and 80.

3. Ins. 514 of 1919; Ins, 410 of 1923.

4. S.I.I., Vol. IV, No. 317.

5. Ibid, Vol. VIII, No. 469; Ins. 271 of 1904.