உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

207

அச் செய்திகளெல்லாம் கண்ட கோபாலன் சோழர்க்குப் பகைஞராயினார் எல்லோரையும் போரில் வென்று அன்னோர்க்கு உதவி புரிந்திருத்தல் வேண்டும் என்பதை நன்கு வலியுறுத்துதல் காண்க.

2

இனி, சோழ இராச்சியத்தின் வட பகுதியிலிருந்த காஞ்சி மாநகரில் இராசேந்திரனது 29ஆம் ஆட்சி யாண்டாகிய கி.பி. 1245 -க்குப்' பிறகு சோழர்கள் கல்வெட்டுக்கள் காணப்பட வில்லை. அன்றியும், நம் இராசேந்திர சோழன் கல்வெட்டுக்களில் ஒன்று கூட அங்குக் காணப்படவில்லை. ஆனால், கண்டகோபாலன் கல்வெட்டுக்கள் காஞ்சியிலும் அதனைச் சூழ்ந்த நிலப் பரப்பிலும் உள்ளன. ஆகவே, அப்பகுதியில் சம்புவராயன் கோப்பெருஞ்சிங்கன் என்போர் அல்லல் விளைத்து வந்தமையால் இராசேந்திரன் அதனைக் கண்ட கோபாலனுக்கு அளித்திருத்தல் வேண்டும். அன்றியும், சோழ இராச்சியத்தைச் சூழ்ந்து அண்மையிலிருந்த குறுநில மன்னர் பேரரசர் ஆகிய எல்லோரும் இராசேந்திரனுக்கும் பகைவர்களாகவே இருந்தனர். அதனையறிந்த இவ்வேந்தன் மிகச் சேய்மையிலுள்ளவனும் தனக்குற்ற நண்பனும் பேராற்றல் படைத்தவனும் ஆகிய கண்ட கோபாலனது தொடர்பினைத் தான் அண்மையில் அமைத்துக் கொள்வது நலமென்று கருதிக் காஞ்சிமா நகரைச் சார்ந்த நிலப் பரப்பை அவனுக்குக் கொடுத் திருத்தலுங் கூடும். அஃது எவ்வாறாயினும், அவனது ஆட்சி வடக்கே நெல்லூர் முதல் தெற்கே செங்கற்பட்டு வரையில் பரவியிருந்தது எனலாம். அவன் தொண்டை மண்டலத்தின் வட பகுதியைச் சோழர் பேரரசுக்கு உட்பட்டே ஆட்சிபுரிந்து வந்தமை குறிப்பிடத் தக்கது.

ராசேந்திரன் வட இலங்கையில் நிகழ்த்திய போர்

இவன் வீர ராட்சசர் மிகுந்த வட இலங்கையை வென்றமையால் இராமனேயாவன் என்று இவனது மெய்க்

1. Ins. 566 of 1919.

2.S.I.I., Vol. IV, Nos. 350, 358 and 359; Ins. Nos. 343, 393, 428, 537 and 538 of 1919.