உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




206

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4 களில் பாண்டியர்க்கு உதவி புரிந்து கொண்டும்' இருந்தமை ம குறிப்பிடத்தக்கது. பாண்டியர் பேரரசு நிறுவ முயலுங்கால் தாம் சோழர்க்கு உதவுவது போல் அவர்களை அடக்குவதும், சோழர் உயர்நிலையெய்த முயலுங்கால் தாம் பாண்டியர்க்கு உதவுவது போல இவர்களை அடக்குவதும் போசள மன்னர்கள் மிகச் சாதுரியமாகக் கையாண்டு வந்த அரசியற் கொள்கை களாம். அவர்கள் தம் நிலையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவ்வாறு செய்து வந்தனர் போலும்.

இராசேந்திரனும் தெலுங்கச் சோழரும்

நெல்லூர், சித்தூர், கடப்பை ஜில்லாக்களில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த தெலுங்கச் சோழர்கள் மூன்றாம் இராசராச னிடத்தில் மிக்க அன்புடையவர்களாய் அவன் பேரரசுக் குட் பட்டுக் குறுநில மன்னராயிருந்து வந்தமை முன்னர்க் கூறப் பட்டுளது. அன்னோர் பெருவலி படைத்தவராதலின் இராச ராசனுக்கு உற்றுழி உதவியும் வந்தனர் எனலாம். திக்க நிருபதி எனப்படும் கண்ட கோபாலனே இராசராசன் காலத்தில் நெல்லூரிலிருந்து அரசாண்ட தெலுங்கச் சோழன் ஆவான்.2 அவன் நம் இராசேந்திரனுக்கும் உற்ற நண்பனாய்த் தக்க சமயங்களில் உதவிபுரிந்து வந்தான். நிர்வசனோத்தர ராமாயணம் என்னுந் தெலுங்கு நூலின் ஆசிரியராகிய திக்கந சோமயாஜி என்பார், தம் நூலின் முன்னுரையில் திக்க நிருபதி, சம்புவராயன், சேதிராயன், காடவராயன் என்ற சிற்றரசர்களை வென்று அடக்கினான் என்று கூறியிருத்தல்' ஈண்டு அறியற்பாலதொன்றாம். அன்றியும், அவ்வாசிரியர், அத்தெலுங்க அரசன் போசள வீரசோ மேசுவரனோடு போர் புரிந்து சோழர்க்கு உதவி புரிந்தமையால் டு 'சோழ ஸ்தாபனா சாரியன்' என்ற பட்டம் பெற்றனன் என்பர்.4

1.

வீரசோமேசுவரன் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கு உதவி புரிந்தமையால் போசளரின் ஆதிக்கம் பாண்டி நாட்டில் வளர்ந்து வந்தது என்பது அந்நாட்டிலுள்ள சில கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. அப் பாண்டி வேந்தன் சுயேச்சை யெய்துவதற்குப் பல்லவர்குலத் தலைவன் கோப்பெருஞ்சிங்கனும் உதவியிருத்தல் வேண்டும் என்பது 'பாண்டி மண்டல ஸ்தாபன சூத்ரதாரன்' என்ற அவன் பட்டத்தினால் நன்குணரக்கிடக்கின்றது.

2. Ins. 446 of 1919; Ins. 415 of 1919.

3. The Colas, Vol. II, pp. 200 and 201.

4. The Colas, page 202, Foot - Note No. 82.