உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

போசள மன்னன் பகைமையும் இராசேந்திரன் பாண்டி நாட்டை இழந்தமையும்

3

205

போசள வேந்தனாகிய வீரநரசிம்மனுக்குப் பிறகு பட்டம் பெற்ற அவன் மகன் வீரசோமேசுவரன் என்பவன் தன்னைப் 'பாண்டிய குல சம்ரக்ஷகன்" என்றும் இராசேந்திரனைப் போரில் வென்றவன் என்றும்' கூறிக் கொள்வதை அவன் கல்வெட்டுக் களில் காணலாம். எனவே, அவன் இராசேந்திரனோடு பகைமை கொண்டு இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கு உதவி புரிந்தனன் என்பது நன்கு துணியப்படும். வேதாரணியத் திலுள்ள கல்வெட்டொன்று வீரசோமேசுவரனுடைய படைத்தலைவனாகிய சிங்கண்ண தண்ட நாயகன் என்போன் கி.பி. 1241-ல் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்த போது இடிக்கப்பட்ட திருக்கோடிக்குழகர் கோயில் கி. பி. 1246-ல் ஐம்பதிநாயிரம் காசு கொண்டு மீண்டுங் கட்டி கும்பாபிடேகஞ் செய்யப்பெற்றது என்று கூறுகின்றது. அன்றியும் புதுக்கோட்டை நாட்டில் திருமெய்யத்திலுள்ள இரு கல்வெட்டுக்கள்" வீரசோ மேசுவரனுடைய தண்டநாயகருள் ஒருவனாகிய இரவிதேவன் என்பான் கான நாட்டைக் கைப்பற்றிய செய்தியை அறிவிக் கின்றன. ஆகவே போசள அரசன் வீரசோமேசுவரன், இராசேந்திர னோடு பல்வேறிடங்களில் போர் புரிந்து, சோழர் ஆட்சிக் குட்பட்டிருந்த பாண்டி நாட்டைக் கைப்பற்றிப் பாண்டியரே சுயேச்சையாக அதனை ஆண்டு வருமாறு செய்து விட்டான் என்று தெரிகிறது. அப்போர் நிகழ்ச்சிகளை இப்போது விளக்கமாக அறிய இயலவில்லை. இராசேந்திரனும் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனும் வீர சோமேசுவரனைத் தம்முடைய மாமன் என்று கல்வெட்டுக்களில்' குறித்துள்ளனர். அவன் சில ஆண்டுகளில் சோழர்க்கு உதவி புரிந்து கொண்டும் சில ஆண்டு

1. Ep. Car., Vol. V.

2. Ibid, Arsikere 123.

3. Ins. 501 of 1904.

4. Inscriptions of the Pudukkottai State, Nos. 340 and 341.

5.S.I.I.,Vol. IV, No. 512; Ins 117 of 1936-37.

Ep. Ind., Vol. XXIV, No. 22; S.I.I., Vol. V, No. 448.