உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




204

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

ஆட்சிபுரிந்து கொண்டிருந்த முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி. 1238-ல் இறந்தான். அவனுக்குப்பின் ரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் முடிசூட்டப் பெற்றுச் சில திங்கள் ஆட்சிபுரிந்து இறந்தனன். அவனுக்குப் பிறகு இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் என்பவன் பட்டம் பெற்று பாண்டி நாட்டை அரசாளுவானாயினன்.' அவன் தன் முன்னோரைப்போல் அத்துணை ஆற்றலும் வீரமும் படைத்தவன் அல்லன். ஆகவே, நம் இராசேந்திரன் அதுவே தக்க காலமென்று கருதிப் பாண்டி நாட்டின்மீது படை யெடுத்துச் சென்று இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனைப் போரில் வென்று அவனைத் தனக்குக் கப்பஞ் செலுத்தும் சிற்றரசனாக்கினான். இப்போர் நிகழ்ச்சியில் பாண்டி நாடு பல்வகைத் துன்பங்களுக்கு உள்ளாயிற்று எனலாம். இராசேந்திரனது ஆட்சியின் ஏழாம் ஆண்டு மெய்க்கீர்த்தி, வன் இராசராசனுக்கு இரு முடிகளைச் சூட்டி மூன்று ஆண்டுகள் முடிய அந்நிலையிலிருந்து ஆளுமாறு செய்தனன் என்று கூறுகின்றது. ஆகவே இராசேந்திரன் பாண்டி நாட்டை வென்று இராசராசன் ஆளுகைக்குட்படுத்தி, அவன் சோணாடு பாண்டி நாடு ஆகிய இரண்டையும் ஆட்சி புரிவதற்கு அடை யாளமாக அவனுக்கு இரு முடிகள் சூட்டியிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். திரிபுராந்தகத்திலுள்ள கல்வெட்டொன்று

2

ரு

வனை 'இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளிய மகாராசாதிராச நரபதி' என்று கூறுவதால், இவன் பாண்டி வேந்தர் இருவரோடு போர்புரிந்து வெற்றி யெய்தி யிருத்தல் வேண்டும் என்பது நன்கறியப் படுகின்றது. அவ்விருவருள் ஒருவன் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆவன்; மற்றையோன் அவனுக்கு முன் பாண்டி நாட்டை யாண்ட வனாகிய இராண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனாக இருத்தல் கூடும். நம் இராசேந்திரன் தன் இளமைப் பருவமுதல் கொண்டிருந்த எண்ணத்தை நிறைவேற்றிவிட்டமை குறிப்பிடத் தக்கது.

1. இவன் கி. பி. 1238-முதல் 1251-வரையில் பாண்டி நாட்டில் ஆட்சி புரிந்தவன். 2.S.I.I.,Vol. IV, No. 511.

3. Ins. 201 of 1905.