உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

203

வனது மெய்க்கீர்த்தி வடமொழியில் வரையப் பெற்றுள்ளது. அதில் குறிப்பிடப் பெற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் அவை நிகழ்ந்த கால வரிசையின்படி அமைந்துள்ளனவா என்பது தெரியவில்லை. அம் மெய்க்கீர்த்தியும், இவனது ஆட்சியின் ஏழாம் ஆண்டாகிய கி. பி. 1253 முதல்தான் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது. சில கல்வெட்டுக்கள்,

வனை 'மனுகுல மெடுத்து நெறிமுடி சூடியருளிய கோப்பரகேசரி வர்மன்" எனவும் சமஸ்த ஜகதேக வீரன்’ கூறுகின்றன. கர்நூல் ஜில்லாவிலுள்ள திரிபுராந்தகம் என்ற ஊரில் பொறிக்கப்பெற்றுள்ள இவன் கல்வெட்டொன்று, 4 இவனை 'இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளிய மகாராசாதிராச நரபதி' என்று சிறப்பித்துரைக்கின்றது. அவற்றையெல்லாம் நுணுகி யாராயுங்கால், இவ்வேந்தன் இயல்பாகவே சிறந்த வீரனாக இருந்திருத்தல் வேண்டும் என்பதும் தன் தந்தையின் காலத்தில் வீழ்ச்சியெய்தி உயர் நிலையை இழந்த சோழ இராச்சியத்தைத் தன் ஆற்றலால் மீண்டும் ஓரளவு நன்னிலைக்குக் கொண்டு வந்திருத்தல் வேண்டும் என்பதும் அம் முயற்சியில் பாண்டியரை வென்று தன்னடிப்படுத்தியிருத்தல் வேண்டும் என்பதும் நன்கு வெளியாகின்றன.

வன் பாண்டியரோடு நிகழ்த்திய போர்

இவன் தன் இளமைப் பருவத்தில் இருமுறை முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் என்பான் சோழ நாட்டின்மேல் படையெடுத்து வந்து நிகழ்த்திய கொடுஞ் செயல்கள் எல்லா வற்றையும் நேரில் பார்த்தவனாதலின் அத்தகைய செயல்களைத் தன் காலத்தில் பாண்டி நாட்டிலும் செய்து காட்டிச் சோழ நாட்டிற்குத் தன் காலத்தில் நேர்ந்த அவமானத்தைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தினைத் தனது உள்ளத்தில் உறுதியாகக் கொண்டிருந்தான். அதற்கேற்ப இவன் பேராற்றல் படைத்த பெரு வீரனாகவும் விளங்கினான். அந்நிலையில் பாண்டி நாட்டில்

1. S.I.I., Vol. IV, No. 511.

"

2. Ins. 185 of 1908 and Ins. 278 of 1923.

3.S.I.I.,Vol. IV, No. 511; Ibid, Vol. VI, No. 44.

4. Ins. 201 of 1905.