உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




விக்கிரம சோழன்

I

பூமாலை மிடைந்து பொன்மாலை திகழப் பாமாலை மலிந்த பருமணித் திரள்புயத் திருநில மடந்தையொடு ஜயமக ளிருப்பக் கனவரை மார்வந் தனதெனப் பெற்றுத் திருமக ளொருதனி யிருப்பக் கலைமகள் சொற்றிறம் புணர்ந்த கற்பின ளாகி

விருப்பொடு நாவகத் திருப்பத் திசைதொறுந்

திகிரியொடு செங்கோல் நடப்ப அகில

புவனமுங் கவிப்பதோர் புதுமதி போல

வெண்குடை மீமிசை நிழற்றக் கருங்கலி

யொளித்துவன் பிலத்திடைக் கிடப்பக் குளத்திடைத் தெலுங்க வீமன் விலங்கல்மிசை யேறவுங் கலிங்க பூமியைக் கனலெரி பருகவும்

ஐம்படைப் பருவத்து வெம்படை தாங்கியும் வேங்கை மண்டலத் தாங்கினி திருந்து வடதிசை யடிப்படுத் தருளித் தென்றிசைத் தருமமுந் தவமுந் தானமுந் தழைப்ப வேதமும் மெய்ம்மையு மாதியுகம் போலத் தலைத்தலை சிறப்பவந் தருளி வெலற்கரும் போர்ப்புலி யாைைன பார்த்திவர் சூட நிறைமணி மகுடம் முறைமையிற் சூடி

மன்னுயிர்க் கெல்லா மின்னுயிர்த் தாய்போல்

தண்ணளி' பரப்பித் தனித்தனி பார்த்து

மண்முழுதுங் களிப்ப மனுநெறி வளர்த்துத்தன்

கோயிற் கொற்ற வாசல் புறத்து

மணிநா வொடுங்க முரசுகள் முழங்க

1. தன்னொளி

221