உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7

66

16. முதற் குலோத்துங்க சோழன்

(கி. பி. 1070 - 1120)

"சுங்கந்தவிர்த்திருள் நீக்கி உலகாண்ட ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்”, என்று கல்வெட்டில் புகழப்பெற்றுள்ள இவ்வேந்தர் பெருமான் கீழைச் சளுக்கிய மன்னனாகிய இராசராச நரேந்திரன் புதல்வன். இவன் தாய் கங்கைகொண்ட சோழன் புதல்வியாகிய அம்மங்கை தேவியாவார்'. எனவே, இவன் தந்தைவழியிற் சோழ மரபினன் அல்லன். ஆனால் தாய் வழியிற் சோழர்மரபிற்கும் இவனுக்கும் தொடர்பிருத்தல் வெளிப்படை. எல்லோரும் தம் தந்தையின் மரபையே தம்முடைய மரபாகக் கூறிக்கொள்வது தொன்றுதொட்டு நிகழ்ந்துவரும் ஒரு வழக்க மாகும். அம்முறையின்படி, நம் குலோத்துங்க சோழன் மண்டலத்தில் தன் தாய்ப்பாட்டன் அரண்மனையிற் பிறந்து இளமைப் பருவத்தில் அங்கு வளர்ந்து வந்தமையாலும் தமிழ் மொழியையே தாய்மொழியாகக் கொண்டு பயின்று தமிழ் மக்களின் வழக்க ஒழுக்கங்களை மேற்கொண்டமையாலும் இவன் தன்னைச் சோழ அரசகுமாரனாகவே கருதிவிட்டான். அவ்வெண்ணமும் இவன் உள்ளத்தில் வேரூன்றிவிட்டது. அதற் கேற்ப, சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாகும் பேற்றை இவன் எதிர் காலத்தில் எய்தியமையோடு அதனை ஐம்பது ஆண்டுகள் வரையில்' ஆட்சிபுரியும் நல்லூழும் பெற்றிருந்தமை இவனது நல்வினையின் பயனே எனலாம்.

இவன் பூசநாளில் பிறந்தவன் என்பது குண்டூர் ஜில்லா பாபட்லாவிலுள்ள திருமால் கோயிலில் காணப்படும்

1. Ins. 408 of 1912.

2. S.I.I., Vol. I, No. 39, A grant of Vira-Choaa, Verses 6-8.

3.S.I.I., Vol. VII. No. 763.