உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 கல்வெட்டொன்றால் அறியப்படுகின்றது. அன்றியும், தென்னார்க் காடு ஜில்லா பெண்ணாகடத்திலுள்ள தூங்கானை மாடக் கோயிலில் திங்கள்தோறும் பூசநாளில் இவ்வேந்தன் நலத்தின் பொருட்டுத் திருவிழா நடத்துவதற்கு நிவந்தம் அளிக்கப் பட்டிருப்பதும் இச்செய்தியை வலியுறுத்துகின்றது. இவன் சிற்றீச்சம்பாக்கம் என்ற ஊரைத் தன் மனைவி திரிபுவனமாதேவி விரும்பியவாறு இறையிலியாக்கி, அதற்குக் கம்பதேவி நல்லூர் என்று பெயரிட்டுத் தானும் தன் மனைவியும் பிறந்த பூசம் சுவாதி என்னும் நாட்களில் திருவிழா நடத்துவதற்கு அதனை நிவந்தமாகக் காஞ்சிமா நகரிலுள்ள கோயிலுக்கு வழங்கி யிருப்பதனாலும்' இதனை நன்கறியலாம்.

இவனுக்கு இளமையில் இராசேந்திரன் என்னும் பெயர் இடப்பெற்றிருந்தது என்பது செல்லூர்ச் செப்பேடுகளால் அறியக்கிடக்கின்றது1. அஃது இவன் தாய்ப் பாட்டனாகிய கங்கைகொண்ட சோழனது இயற்பெயர் ஆகும். பாட்டன் பெயரையே பேரனுக்கு வைப்பது பண்டை வழக்கமாதலின் அப்பெயர் இவனுக்கு வழங்கப்பெற்றது எனலாம். இவன் பிறப்பதற்குச் சில தினங்கள் முன் கி. பி. 1044 ஆம் ஆண்டில் கங்கைகொண்ட சோழன் இறந்து விட்டமையாலும் உடல் உறுப்புக்களாலும் தோற்றத்தாலும் இவன் அவ்வேந்தனைப் போல் காணப்பட்டமையாலும்' இவனுக்கு அவன் பெயர் இடப்பட்டது என்று தெரிகிறது.

இவன், தன் தந்தையின் ஆட்சிக் காலத்தில் வேங்கி நாட்டில் இளவரசுப்பட்டம் கட்டப்பெற்ற நாளில் அந்நாட்டின் ஒழுகலாற்றின்படி 'விஷ்ணுவர்த்தனன்' என்னும் அபிடேகப் பெயர் அளிக்கப்பெற்றனன்'. வேங்கி நாட்டில் காணப்படும்

1. Ibid., Vol. VI, No. 167. 'சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர் திரு நக்ஷத்திரமான பூசத்திருநாள் எழுந்தருள'

2. Ins. 242 of 1929.

3. Ins. 45 of 1921.

4. S.I.I.Vol. I. No. 39.

5. கலிங்கத்துப்பரணியிற் காணப்படும் அவனிபர்க்குப் புரந்தரனாம் அடையாளம் அவயவத்தின் அடைவே நோக்கி' என்னுந் தாழிசையால் இஃது உய்த்துணரப்படுகின்றது.

6. Ins. 396 & 400 of 1933.