உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

9

இவன் கல்வெட்டுக்களில் அப்பெயர் தவறாமல் குறிக்கப் பட்டிருப்பது அறியத்தக்கதாகும். எனவே, இவனுக்கு அப்பெயர் சிறப்பாக அந்நாட்டில் வழங்கி வந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆனால், இவன் தன் தந்தை இறந்த பின்னர் வேங்கி நாட்டில் முடிசூட்டப்பெற்று ஆட்சி புரிந்தமைக்குத் தக்க சான்றுகள் கிடைக்கவில்லை. இவன் அக்காலத்தில் இளைஞனாக இருந்தமையாலும் இவன் சிறிய தந்தையாகிய விசயாதித்தன் என்பவன் வேங்கி நாட்டைத் தான் ஆட்சி புரியவேண்டும் என்று பெருவிருப்புடையவனாக இருந்தமையாலும் இவன் இளவரசுப் பட்டம்பெற்றிருந்தும் அந்நாட்டின் ஆட்சியைப்பெற இயலவில்லை. இவன் மாமன் இரண்டாம் இராசேந்திரனும் மேலைச் சளுக்கியரோடு போர் நிகழ்த்துவதில் பெரிதும் ஈடுபட்டிருந்தமையால் வேங்கி நாட்டின் நிலைமையை யுணர்ந்து இவன் ஆட்சியுரிமை நிலை நிறுத்துவது இயலாததாயிற்று'. எனவே, இவனுக்குரிய அந்நாடு இவன் சிறிய தந்தையாகிய விசயாதித்தன் ஆட்சிக்குள்ளாயிற்று. இதுபற்றி இவ்விருவர்க்கும் பகைமை ஏற்பட்டிருந்தது என்பது விசயாதித்தன் செப்பேடு களாலும் அவன் புதல்வன் சத்திவர்மன் செய்பேடுகளாலும் நன்கறியக் கிடக்கின்றது . ஆனால் அப்பகைமை முற்றாமல் நாட்செல்லச் செல்லக் குறைந்து கொண்டே போய் இறுதியில் நீங்கியது எனலாம். விசயாதித்தன் புதல்வனாகிய சத்திவர்மன் கி. பி. 1063 ஆம் ஆண்டில் இறக்கவே, இராச்சியத்தில் அவன் வைத்திருந்த பற்றும் குன்றியது. எனவே அவன் தன் தமையன் புதல்வனாகிய நம் இராசேந்திரனிடத்தில் சிறிது அன்பு பாராட்டவும் தொடங்கினான். இவனும் தன் சிறியதந்தை உயிர் வாழுமளவும் வேங்கிநாடு அவன் ஆட்சிக் குட்பட்டிருத்தற்கு உடன்பட்டவனாய்

1. S.I.I., Vol. IV, Nos. 1187,1281,1320, 1260 and 1263.

2. Ep. Ind, Vol. XXV, P. 248. Kanyakumari Inscription of Vira Rajendra Chola, Verse. 77.

3. Ryali plates of Vijayaditya VII and the Telugu Academy plates of Saktivarman II.

4. விசயாதித்தன் நம் இராசேந்திரனுக்குரிய வேங்கி நாட்டைக் கவர்ந்து கொண்டமைக்குக் காரணம் அந்நாட்டைத் தன் புதல்வன் சத்திவர்மன் ஆளும்படி செய்தல் வேண்டும் என்ற எண்ணமே யாம். அப்புதல்வன் இறந்துவிட்டமையால் அந் நாட்டின் மீது அவன் வைத்திருந்த பற்றும் மிகக் குறைந்து போயிற்று என்பது ஒருதலை.