உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

புவனியெழத் தனதாணையிற் புரக்குமந்தப் புரப்பெருமாள் பொய்யாநெடு நிலநான்கும் பொருகுடையி னிருநான்கு மாதிரமும் விளங்கவந்த வாணர்குல நிலைவிளக்கு குலகரியெட்டும்பரித்த குலவட்ட மலர்கவிகைக் சக்கரவர்த்தித னந்த புரச் சக்கரவர்த்தி காசெறிய கோடெயில் வானவர்சசி குலதீப தராபதி

மாதேவியார் தொழுதிறைஞ்சும் மடந்தைமங்கையர் தம்பெருமாள் அவ்வுலகத் தருந்ததியும் அதிசயிக்கும் பெரும்கற்பா லிவ்வுலகத் தருந்ததியென விசைதந்த திசைவிளங்கத் திருந்தியவேல் இராஜராஜன் ராஜேந்திரன் திருவருளென்னும் பெருந்தனிப்பாற் கடல்படிந்து விளையாடும் பெடையன்னம் ஆணையெங்குந் தனதாக்கிய ஆதிஇராஜன் மாதேவி வளர்வங்க சூளாமணி மறையவர்தொழுஞ் சிந்தாமணி சோணாடன் இராஜராஜன் சுரிமலப்பூந் துழாய்மார்பில் பூணார மெனவிளங்கிய புவன முழுதுடையாளும் அனந்தகற்ப நாள்பிரியாது மனங்களித்து மணம்புணரச் செம்பொன் வீரஸிம்ஹாஸனத்துப் புவனமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோராஜகேசரிவர்மரான

திரிபுவனச்சக்கரவர்த்திகள்

ஸ்ரீராஜராஜதேவற்கு யாண்டு நாலாவது.

237