உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




236

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4 பாரேழும் பொழிலேழும் படிபரிக்கும் கிரியேழும் நீரேழுந் தனிகவித்து நிறைமதிவெண் குடைநிழற்றப் புறவாழியும் வரையாழியும் பூதலமும் பொதுநீக்கி அறவாழியுஞ் செங்கோலு மனந்தகற்பகா லம்புரக்க ஒப்பரிய மறைநாலும் உரைதிறம்பா மனுநூ லுஞ் செப்பரிய வடகலையும் தென்கலையுந் தலையெடுப்ப நீதிதரு குலநான்கும் நிலைநான்கு நிலைநிற்ப ஆதியுகங் குடிபுகுத அறுசமையந் தழைத்தோங்கப் பொருதுறையுஞ் சினவேங்கையு மடமானும் புகுந்துடனே யொருதுறைநீ ரினிதுண்டு பகையின்றி யுறவாடப் புயல்வாரி பொழிவிக்கும் பொற்றொடியவர் கற்புயர வயல்வாரி வளம்பெருகி மறையவர்முத் தமிழ்வளர்க்கும் நெறிமுறைமை யினிதீண்டித் தனதாணை திசைநடப்ப

நிருபர்குலம் பெலம்படா நிலங்காவற் றொழில்பூண்டு

செருவலியில் முருகனென்றுந் திருவடிவில் மதனனென்றும்

பெருகொளியில் பருதியென்றும் பெருந்தகைமையிற்றருமனென்றும் தண்ணளியில் மதியென்றுந் தனந்தருதலிற் றாயென்றும்

மண்ணுலகத் திகல்வேந்தரு மறைவாணரும் போற்றெடுப்ப மீனவருஞ் சிங்களரும் விக்கலரும் கற்கடரும்

வானவரும் குந்தளரும் வங்களரும் பார்மருங்கு

பல்லவரும் மாகதரும் பாஞ்சாலரும் காம்போசரும் கொங்கணரும் திரிகத்தரும் கூபகருஞ் சாவகரும்

பண்டையரும் திருவடிக்கீழ்ப்பரிந்துதிறை சொரிந்திறைஞ்ச எண்டிசையும்புரந்தளிக்கும் இராஜராஜதுங்கன் இராஜராஜன் மலைபேரிலும் வான்பேரிலும் மாதிரங்கால்

நிலைபேரிலும் பேராத நெஞ்சுடைய செஞ்சேவகன் அலகில்பெரும் புகழாகரம் மங்கையருக் கரசாகி

உலகுடைய பெருமாளுடன் ஒக்கமணி முடிகவித்தாள் உறந்தைவள நகரம்போல உலகமொரு பதினான்கும் பிறந்துடையாள் இராஜராஜன் பிரியா வேளைக்காரி

இயல்வாழவும் இசைவாழவும் இமையமலை மகளறத்தின் செயல்வாழவும் ராஜராஜன் திருத்தாலி பெற்றுடையார் அரசிறைஞ் சழக னருணிறைந்த வுலகதனில்

உரைசிறந்த தனியாணை உடனாணை பெற்றுடையாள் தவளவயப் பரிகண்டன் காத்தளிக்குங் கற்பகாலம்