உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மூன்றாம் இராசராச சோழன்

சீர்மன்னி இருநான்கு திசைவிளங்கு திருமடந்தையும் போர்மன்னு சயமடந்தையும் புவிமடந்தையு மணம்புணர் அருமறைகள் நெறிவாழ அருந்தமிழோர் கிளைவாழப் பொருவில்மனு நெறிவாழப் பொன்மகுடம் கவித்தருளி வெங்கோபக் கருங் கலிப்பகை விடநாகம்

செங்கோலுங் கொடிப்புலியுந் திகிரிவரை வரம்பளக்க எண்டிசைமுகத் தெண்கரிக்கு மெடுத்ததனிக் கூடமென அண்டகூட முறநிமிர்ந்து முழுமதிக்குடைநின் றழகெறிப்ப நடுவுநின்று குடிகாத்து நன்றாற்றுந் திறம்பொறாது கடிதிழைத்த உட்பகையும் புறப்பகையு மறக்கடிந்து பொலந்திகிரி பதினான்கு புவனங்களு மடிப்படுத்தி

இலங்குகதிர் வடமேருவி லிருந்தவயப் புலியேறென்னச் செம்பொன்வீர சிங்காசனத்துப் புவனமுழுதுடையாளொடும்

வீற்றிருந்தருளிய கோவிராசகேசரி வர்மரான

திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ இராஜராஜ தேவர்க்கு யாண்டு

П

சீர்மன்னு மலர்மகளும் சிறந்ததனி நிலைச்செல்வியும் பார்மன்னு பசுந்துளவச் சயமடந்தை மனங்களிப்ப

புகழ்மடந்தை புகழ்பாடப் புலமகளும் பூசுரரு

முகமலர்ந்து கண்களிப்ப முனிவர்கணந் துதியெடுப்பத் தனித்துலக முழுதாளத் தடங்கரைப் பாற்கடல்பிரிந்த பனித்துளவ நறுந்தாமப் பரந்தாம னெனவந்து

கடிமுரச மொருமூன்றுங் கடனான்கு மெனமுழங்கப் படிமுழுது மிருணீங்கப் பருதிதனிக் குலம்விளங்கக் கொடியேந்து புலியிமையக் குலவரைமேல் வீற்றிருப்ப முடிவேந்த ரடிசூட முறைமையினால் முடிசூடி வடவரையின் படவரவின் மணிமுடியும் பொடியாகத் தடவரையின் நெடுந்தோளின் படிபரிக்கும் கிரியேழும்

235