உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




242

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

எண்டிசை யுலகை யொருகுடை நிழற்கீ

10

ழிருத்திய குலோத்துங்கற்சோழற்

கியாண்டொரு முப்பத் தெட்டினிற் சோணாட்

டிசைவள ரிந்தளூர் நாட்டுள்

உண்டை நீடியநீ டூருமை யோடு

முலாவின சிவபெரு மானுக்

குவந்து வெண்கயிலை மலையெனச் சிலையா

லுத்தம விமானமிங் கமைத்தான்

தண்டமி ழமித சாகர முனியைச்

சயங்கொண்ட சோழமண் டலத்துத்

தண்சிறு குன்ற நாட்டகத் திருத்தித் சந்தநூற் காரிகை யவனாற் கண்டவன் மருமான் காரிகைக் குளத்தூர் காவல னிலாவினா னெவர்க்குங்

கருணையு நிதியும் காட்டிய மிழலை

நாட்டுவேள் கண்டன் மாதவனே.

ஒதுஞ் சகரர்யாண் டோரொருபத் தெட்டின்மேல்

11

ஆதிமூ லந்நாளி லானிதனிற் -சோதி

துளங்கில மேற்சோழன் சோழகுல வல்லி

களங்கமற வைத்தாள் கரு.

சரநிரைத் தாலன்ன தண்பணி தூங்கத் தலைமிசைச்செங்

12

கரநிரைத் தாரையுங் காண்பன்கொ லோகலிங் கத்துவெம்போர் பொரநிரைத் தார்விட்ட வேழ மெல் லாம்பொன்னி நாட்டளவும் வரநிரைத் தான்றொண்டைமான் வண்டைமாநகர் மன்னவனே புயன்மேவு பொழிற்றஞ்சை முதற்பஞ்ச நதிவாணன்

புதல்வன் பூண்ட 13 வயமேவு களியானை முடிகொண்டான் மாநெடுவேல்வத்தர் வேந்தர் இயன்மேவு தோளபயற் கிருபத்தை யாண்டதனி னிடர்க்க ரம்பைச் செயன்மேவு மீசர்க்குத் திருநந்தா விளக்கொன்றுதிருத்தி னானே

11. S.I.I., Vol., No.621.

12 கலிங்கத்துப்பரணிக் கையெழுத்துப் பிரதிகளின் இறுதியிற்கண்ட பாடல்; பெருந்தொகை, பக்கம்,249.

13. S.I.I., Vol, IV, No. 1338.