உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

விக்கிரம சோழன்

நடித்தது நச்சர வுச்சியி னுச்சி மதிலிலங்கை இடித்தது வென்ற திருபது தோள்பதி னெண்பகலே முடித்தது பாரதம் வீரப் புலிவைப்ப மூரிச்செண்டால்

அடித்தது பொற்கிரி விக்ரம சோழ வகளங்கனே.

14

கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயுஞ்

15

செய்ய கரிய திருமாலே -வையம்

அளந்தா யகளங்கா வாலிலைமேற் பள்ளி

வளர்ந்தாய் தளர்ந்தாளென் மான்.

சரியும் புனைசங்குந் தண்டளிர்போன் மேனி

16

வரியுந் தன தடஞ்சூழ் வம்பும் -திருமான

ஆரந் தழுவுந் தடந்தோ ளகளங்கன்

கோரந் தொழுத கொடிக்கு.

விச்சா தரனேனு மந்தரத்து மேவானால்

17

அச்சுத னாயினுமம் மாயனலன்-நிச்ச நிறைவான் கலையான் அகளங்க னீதி இறையா னனகனெங் கோன்.

தண்டாமரை தருநாண்மலர் மீதோதிம மீனத்

தரளத்திரள்பவளத்திர ளென்றேழையர் தங்கைக்

கொண்டாடிட முன்னைக்கிது பின்னைத்தரு செம்மைக்

குணநான்மடி யுளதாகிய குடகாவிரி நாடா பண்டாலிலை யமளித்துயில் குழவிப்பரு வத்தே

பவ்வத்தொடு முலகைச்சிறு பவளத்துவர் வாயால் உண்டாயக ளங்காநிக ளங்காய்கரி தொழுதாள்

உய்யத்திரு வுளமோவெது செய்யத்திரு வுளமோ.

14. தமிழ் நாவலர் சரிதை, பா.117.

15. விக்கிரம சோழன் உலாவில் இறுதியிலுள்ளவெண்பா.

16. தண்டியலங்காரம், 40மேற்கோள்.

17. வீரசோழியம், அலங்காரப் பாடல், 30 மேற்கோள்.

18. தஞ்சைச் சரசுவதிமால் ஏட்டுப்பிரதியிற் கண்ட பாடல்; பெருந்தொகை, பக்கம் 182.

18

243