உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




244

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

செய்யோனக ளங்கன்வள வன்சோழ குலேசன்

சென்னிக்குல தீபன்னுயர் பொன்னித்திரு நாடன் பொய்யோடொரு நாளும்முறை செய்யாமனு துங்கன்

போர்வல்லவன் மல்லைப்பொழில் பொங்குங் குருகீரே

அய்யோவவ ரைப்போலொரு நிட்டூரரு முண்டோ

அஞ்சம்படு கைக்கேதுயர் நெஞ்சம்படு கைக்கே வெய்யோன் விழு கைக்கேழுதுயர் நெஞ்சம்படு கைக்கே விழிநீர்சொரி கைக்கேயெனை விட்டுப்பிரிந் தாரே.

வடவைக்கனலைப் பிழிந்துகொண்டு

மற்றுமொருகால் வடித்தெடுத்து

வாடைத்துருத்தி வைத்தூதி

19

20

மறுகக்காய்ச்சிக் குழம்புசெய்து

புடவிக்கயவர் தமைப்பாடிப்

பரிசுபெறாமற் றிரும்பிவரும்

புழுகென்றிறைத்தாற் பொறுப்பாளோ

புலவர்மனம்போற் சுடுநெருப்பைப்

அடவிக்கதலிப் பசுங்குருத்தை

நச்சுக்குழலென் றஞ்சியஞ்சி

அஞ்சொற்கிளிகள் பஞ்சரம்விட்

டகலாநிற்கு மகளங்கா

திடமுக்கடவா ரணமுகைத்த

தேவே சோழசிங்கமே

திக்குவிசயஞ் செலுத்தியொரு

செங்கோனடாத்து மெங்கோவே.

செங்கான்மாட வன்னம்படர் தீயாமென வெருவிச்

சிறையிற்பெடை மறையக்கொடு திரியத்திரள் கமுகின் 21

பைங்கான்மா கதமீது படர்ந்துதேறி நறுந்தண்

பாளைக்கிடை பவளக்கொடி படர்காவிரி நாடா

தங்கா தலி யருமைந்தரு முடனாக வணங்கும்

தலைகாவெம துடல்காவெம் துயிர்காவகளங்கா

19.மேற்படி

20. தனிப்பாடல்; பெருந்தொகை, பக்கம். 182.

21. தமிழ் நாவலர் சரிதை, பா. 129