உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

245

கொங்காமன துங்காவென மதுரேசர் வணங்கும்

கொல்யானை யபங்காவிவள் குழலோசை பொறாளே.

இன்னங் கலிங்கத் திகல்வேந்த ருண்டென்றே

22

தென்னன் தமிழ்நாட்டைச் சீறியோ -சென்னி

அகளங்கா வுன்றன் அயிரா வதத்தின்

நிகளங்கால் விட்ட நினைவு.

பழியும் புகழு மெவர்க்குமுண் டாமிந்தப் பாரிலுனக்

23

கழியுஞ் சிலையுங் கயலுமன் றோவக ளங்கதுங்க

மொழியும் பொழுதெங்கள் பெண்சக்ர வர்த்தி முகத்திரண்டு

விழியும் புருவமு மாகியிப் போதுன்னை வெல்கின்றவே.

தூபங் கமழும்பைங் கோதையன் விக்கிரம சோழன் மன்னர் 24 தீபன் புறங்கடை வந்துநின் றானின் றிருப்புருவச்

சாபங் குனிய விழிசிவப் பத்தலை சாய்த்துநின்ற

கோபந் தணியன்ன மேயெளி தோநங் குடிப்பிறப்பே.

விக்கிரம சோழன் படைத்தலைவன், மணவிற்கூத்தன் காலிங்கராயன் தில்லையில் புரிந்த திருப்பணியைப் பற்றிய பாடல்கள்.

எல்லை கடலா விகல்வேந்த ரைக்கவர்ந்த

செல்வமெலாந் தில்லைச் சிற் றம்பலத்துத்-தொல்லைத்

திருக்கொடுங்கை பொன்மேய்ந்தான் றிண்மைக் கலியின்

25

தருக்கொடுங்க வெல்கூத்தன் றான்.

தில்லையிற்பொன் னம்பலத்தைச் செம்பொனால்

மேய்ந்துவா

26

னெல்லையைப்பொன்னாக்கினா னென்பரால்-ஒல்லை

வடவேந்தர் செல்வமெலாம் வாங்கவேல் வாங்கும்

குடைவேந்தன் றொண்டையார்கோ.

தென்வேந்தன் கூனிமிர்த்த செந்தமிழர் தென்கோயில்

27

பொன்மேய்ந்து திக்கைப் புகழ்வேய்ந்தான்-ஒன்னார்க்குக்

22. மேற்படி பா. 123.

23.மேற்படி, பா.142.

24. மேற்படி, பா.138.

25-30. சிதம்பரக் கல்வெட்டுக்கள்; S.I.I. Vol. IV, P. 33