உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

275

வடமொழியில் உள்ள இந்தச் சாசனத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு வருமாறு:

-

1. சக்கரம் முதல் அநுராதம் வரையில் (அதாவது வடக்கே யுள்ள சக்கரக் கோட்டம் முதல் தெற்கேயுள்ள அநுராதபுரம் வரையில் ) உள்ள பூமியைப், போர்முகத்தில் ஸிம்ஹௗ அரசனைக் கொன்று, கேரள மன்னனை முறியடித்து, இந்திரனை ஜயித்த வீரபாண்டியனைக் கொன்று, பாண்டிய மன்னனால் பாதுகாக்கப் பெற்ற மதுரையைக் கைப்பற்றி (அழித்து), அங்கே வீராபிஷேகம் செய்து, திரைலோக்ய வீரன் என்ற பெயர் பெற்ற அரசன் ஸ்ரீகுலோத்துங்க சோழன் வெற்றி கொண்டு ஆண்டு வருகின்றான்.

2.அவனுடைய புஜங்கள் (கதவுக்குத் தாழ்ப்பாள் போல்) திக்குகளை யெல்லாங் காத்துத் தொந்தரவு ஏதும் நிகழாமல் பரிபாலனம் நடத்தி வருவதால், முன்னொரு நாள் மகாவிஷ்ணு ஆதிவராக அவதாரம் எடுத்துத் தன்னுடைய தந்தங்களால் பூமியைத் தூக்கி நிலைநிறுத்திய போது, வாள் முனையில் கிடப்பது போல் அங்கே இருந்த நிலைக்குப் பூமிதேவி இப்போது இன்பத்துடன் நினைவு கூர்கிறாள்.

3. புஜபல பராக்ரமமாகிய நெருப்பிலிருந்து வந்த புகைக் கூட்டம் போலவும், போர்மடந்தையின் கறுத்த கேசபாசம் போலவும் (கறுத்த நிறம் வாய்ந்து). மூவுலகத்தையும் ரக்ஷிப்பதற் கென்றே பிரமாவினால் நியமிக்கப்பட்ட அவனுடைய குணப் பிரதாபங்களை யாரே விவரித்துக் கூற முடியும்!

4.பூமி முதல் ஆகாசம் வரையில் இடைவெளியில்லாமல் பரந்து ஒளி வீசும் அவனுடைய புகழ் பிநாகபாணியான சிவபெருமானுடைய திருமேனிபோல் மூவுலகத்திலும்

வியாபித்து நிற்கிறது.

(ரதாங்கபாணி என்பது பாடமானால் அந்தச் சொல் ‘ரதத்துக்கு அங்கமான வில்லைக் கையில் தரித்திஸருப்பவர்' என்று பொருள்படும். விஷ்ணுவின் நாமங்களில் அது ஒன்று. விஷ்ணு என்னும் சொல்லே 'எல்லா இடங்களிலும் வியாபித் திருப்பவர்' என்ற பொருள் வாய்ந்தது.