உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




276

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

5. அழகில் மன்மதன் ; கொடையில் கற்பக விருக்ஷம்; பொறுமையில் பூமி; கோபத்தில் யமன்; வீரத்தில் பரசுராமன், அர்ஜ்ஜூநன் ஆகியோர்; நீதியில் பிரகஸ்பதி, சுக்கிரன் ஆகியவர்கள் ; மூவுலகத்தையும் பாதுகாத்து ரக்ஷிப்பதில் இந்திரன் சங்கீதத்தில் பரதமுனிவர் ; ; இவ்விதம் விளங்கும் அரசனான இந்த வீரனுடைய புகழை வருணித்துக் கூற முடியுமா?

6. (சிதம்பரத்திலே ) சபாபதியின் (அதாவது நடராஜாவின்) முன்னுள்ள மண்டபத்தையும். மலைமகள் (கிரீந்திரஜா அதாவது சிவகாமி அம்மை) கோயிலின் கோபுரத்தையும் சுற்றியுள்ள பிரகார மாளிகைகளையும், அவ்வூர்ப் பெருமானிடத்தே இடை யறாத பக்திகொண்ட இவ்வரசன் பொன்மயமாக விளங்கும் படி நிர்மாணித்தான்.

7. (காஞ்சீபுரத்திலே) ஏகாம்பரேசருடைய அழகு பொருந்திய கோயிலையும், மதுரையில் ஆலவாயாருடைய (அதாவது சுந்தரேசப் பெருமானுடைய ) கோயிலையும், (திரு விடை மருதூர்) மத்யார்ஜ்ஜூநத்தின் கோயிலையும், (தாரா சுரத்தில் உள்ள) ஸ்ரீராஜ ராஜேச்சுர ஆலயத்தையும், (திருவாரூரில் உள்ள) வன்மீகநாதருடைய கோயிலையும், இந்நிலவுலகில் பொன் மயமாக விளங்கும்படி அமைத்தான். இன்னும் புற்றிடங் கொண்டாரது சபையையும் பெரிய கோபுரத்தையும் கட்டினான்.

8. பூமியின் நான்கு திசைகளையும் வெற்றிகொண்ட திரிபுவன வீரன் இவ்வூரையே இருப்பிடமாகக் கொண்டு அநேகப் பிரகார மாளிகைகள், பற்பல வீதிகள் ஆகியவற்று டனும், சூரியனுடைய கதியையே தடுக்கக் கூடியதாக வான வீதியை முட்டும் படி உயர்ந்த விமானத்துடனும் பொன் மயமாக அழகுபெறத் திரிபுவன வீரேச்சுரம் என்னும் இத்திருக் கோயிலை எடுப்பித்தான்.

9.

ஸ்ரீகண்டசம்பு என்பவருடைய ய குமாரரும், தன்னுடைய குருவும் ஆன ஈசுரசிவர் என்னும் சோமேசுரரைக் கொண்டு இவ்வுலகத்துக்கே அம்மையப்பராக விளங்கும்

1. விக்கிரம சோழனுக்கு ஸ்ரீகண்டசம்பு என்னும் ஒருவர் ராஜ குருவாக விளங்கி வந்தார் என்பது அவனுடைய கல்வெட்டுகளிலிருந்து தெரிகிறது. அந்த ஸ்ரீகண்டசம்புவே இவர் போலும்.