உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

277

பரமசிவன் பார்வதி ஆகிய இருவரையும் மிகச் சிறந்த முறையில் 'பாண்டியாரி' என்ற இவ்வரசன் பிரதிஷ்டை செய்வித்தான்.

10.ராஜகுருவான அந்த ஈசுரசிவர் வித்துவான்களில் சிறந்தவர், பதினெட்டு சிவ புராணங்களையும் தெளிய அறிந்தவர். பெருமானின் உயர்வைச் சொல்லும் உபநிட தங்களை விரிவாகச் சொல்பவர், சைவ தர்சநந்தை (அனுப வத்தில்) கண்டவர், சித்தாந்த ரத்நாகரம் என்னும் நூலை இயற்றியவர். யாரே அவரது குணத்தைத் தேடி அடைய முடியும்! (ஒருவராலும் முடியாது.)

1. South Indian Temple Inscriptions, Vol. II, pp. 945-50