உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




278

மூன்றாம் ஸ்ரீ இராசராச சோழனது

திருவயீந்திரபுரக் கல்வெட்டு

ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சர்க்கரவர்த்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு 15-வதின் எதிராமாண்டு பிரதாப சக்கர வர்த்தி ஹொய்சள ஸ்ரீ வீரநரசிம்ம தேவன் சோழச் சக்கர வர்த்தியைக் கோப்பெருஞ்சிங்கன் சேந்தமங்கலத்தே பிடித்துக் கொடு இருந்து தன் படையை யிட்டு ராஜ்யத்தை அழித்து தேவாலயங்களும் விஷ்ணு ஸ்தானங்களும் அழிகையாலே இப்படி தேவன் கேட்டருளி சோழமண்டல பிரதிஷ்டாசாரியன் என்னும் கீர்த்தி நிலைநிறுத்தியல்லது எக்காளம் ஊதுவதில்லை என்று தோர சமுத்திரத்தினின்றும் (படை ) எடுத்து வந்து மகர ராஜ்ய நிர்மூலமாடி இவனையும் இவன் பெண்டு பண்டாரமும் கைக்கொண்டு பாச்சூரிலே விட்டுக் கோப்பெருஞ் சிங்கன் தேசமுமழித்துச் சோழச் சக்கரவர்த்தியையும் எழுந்தருளுவித்துக் கொடுவென்று தேவன் திருவுள்ளமாய் ஏவவிடைகொண்டு எழுந்த ஸ்வஸ்திஸ்ரீ மனுமஹாபிரதானி பரமவிஸ்வாஸி தண்டின கோபன் ஜகதொப்ப கண்டன் அப்ண தண்ணாக்கனும் சமுத்திர கொப்பய தண்ணக்கனும் கோப்பெருஞ்சிங்கனிருந்த எள்ளேரியும் கல்லியூர் மூலையும் சோழ கோனிருந்த தொழுதகையூரு மழித்து வேந்தன் முதலிகளில் வீரகங்க நாடாழ்வான் சீனத்தரையன் ஈழத்து ராஜா பராக்கிரம பாஹூள்ளிட்ட முதலி4 பேரையும்.... கொன்று இவர்கள் குதிரையுங் கைக்கொண்டு கொள்ளிச் சோழகோன் குதிரைகளையுங் கைக் கொண்டு பொன்னம்பல தேவனையும் கும்பிட்டு எடுத்து வந்து தொண்டமாநல்லூர் உள்ளிட்ட தமக்கூர்களும் அழித்து அழி....... காடும் வெட்டி வித்து திருப்பாதிரிப்புலியூரிலே விட்டிருந்து திருவதிகை திருவக்கரை உள்ளிட்ட ஊர்களு மழித்து வாரணவாசி ஆற்றுக்குத் தெற்கு சேந்தமங்கலத்துக்கும் கிழக்கு கடலிலே அழிவூர்களும் குடிகால்களும் சுட்டும் அழித்தும் பெண்டுகளைப் பிடித்தும்