உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

45

என்று இரண்டாங் குலோத்துங்க சோழன் உலாவில் கூறியிருத் தலால் அச் சுங்க வரி' நெடுங்காலமாக நிலை பெற்றிருந்த தொன்மையுடையது என்பதும், அதனை எவ் வேந்தரும் நீக்கத் துணியவில்லை யென்பதும் அத்தகைய பழைய வரியை இவன் நீக்கிப் புகழெய்தினான் என்பதும் நன்கறியக் கிடத்தல் காண்க. குலோத்துங்கன் தன் நாட்டில் சுங்கந் தவிர்த்து அரசாண்டமை அக்காலத்தில் பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வந்தமையால் இவன் வழித்தோன்றல்கள் மூவரின் மீது உலாக்கள் பாடிய புலவர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர் இவ்வருஞ் செயலை அந்நூல்களில் மறவாமல் கூறிப் புகழ்ந்திருப்பதோடு தம் தக்கயாகப் பரணியிலும்' குறிப்பிட்டுள்ளனர். இவ்வேந்தனது இவ்வரிய செயல் பற்றிச் சில ஊர்கள் சுங்கந் தவிர்த்த சோழ நல்லூர்" எனவும் ஓர் ஆறு சுங்கந் தவிர்த்த சோழப் பேராறு எனவும் இவன் ஆட்சிக் காலத்தில் பெயர்கள் எய்தின என்பது சில கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. கி. பி. 1194 ல் மூன்றாங் குலோத்துங்க சோழன் ஆட்சியில் திருவிடை

-

1. குலோத்துங்கன் நீக்கிய இச் சுங்கம் எத்தகையது என்பது புலப்படவில்லை. எனினும், `உறுபொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார்த் - தெறுபொருளும் வேந்தன் பொருள்' என்னுங் குறட்பாவின் உரையில் ஆசிரியர் பரிமேலழகர், உல்குபொருள் என்பதற்குச் சுங்கமாகிய பொருள் என்று பொருள் கூறியுள்ளனர்; அன்றியும், 'சுங்கம் கலத்தினுங் காலினும் வரும் பண்டங்கட்கு இறையாயது' என்று அதனை விளக்கியுள்ளனர். ஆகவே, சுங்கம் என்பது வாணிகத்தின் பொருட்டு மரக் கலத்திலும் வண்டியிலும் வரும் பண்டங்களுக்கு வாங்கும் வரிப்பொருள் ஆதல் வேண்டும். கப்பலில் ஏற்றப்படுவனவும், அதிலிருந்து இறக்கப்படுவனவும் ஆகிய பண்டங்கட்கு அரசாங்கத்தினர் அந்நாளில் வாங்கிய வரியை ஆசிரியர் நச்சினார்க்கினியர் தம் பட்டினப்பாலை உரையில் சுங்கம் கூறியிருப்பது ஈண்டு அறியத்தக்கது.

2. (i)

தொல்லை

மறக்கலியும் சுங்கமும் மாற்றி - அறத்திகிரி வாரிப் புவனம் வலமாக வந்தளிக்கும் ஆரிற் பொலிதோள் அபயற்கு

(ii) கலகமுஞ் சுங்கமுங் காய்கலியு மாற்றி உலகைமுன் காத்த உரவோன்

3. அழிவந்த வேதத் தழிவு மாற்றி

யவனி திருமகட் காக மன்னர்

வழிவந்த சுங்கந் தவிர்த்த பிரான்

மகன்மகன் மைந்தனை வாழ்த்தினவே

(விக்கிரம சோழ னுலா, 51-54)

(இராசராச சோழ னுலா, 51-52)

(த.பரணிதா. 775)

5

4. Ins. 231 and 233 of 1916; தஞ்சையைச் சார்ந்த கருந்திட்டைக்குடிக்குச் சுங்கந்

தவிர்த்த சோழ நல்லூர் என்ற வேறு பெயரும் உண்டு.

5. Ins. 363 of 1907.