உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

1

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

வரையில் அரசாண்ட திரிபுவனாதித்திய தம்மராசன் என்னும் வேந்தனொருவன், சோழ அரசகுமாரன் ஒருவனைப் புத்த சமயத்தினனாக மாற்றியதோடு அவன் மகளை மணந்து கொண்டான் என்றும் அந்நாட்டிலிலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது. அக்காலப் பகுதியில் சோழ இராச்சியத்தை ஆட்சி புரிந்தவன் முதற் குலோத்துங்க சோழனேயாவன். இவ்வேந்தர்க்கும் அந்நிகழ்ச்சிகட்கும் ஒரு சிறிதும் தொடர் பில்லை என்பது திண்ணம். அச் செய்திகள் நம் நாட்டிலுள்ள கல்வெட்டுக்களிலும் இலக்கியங்களிலும் காணப்படாமையால் பௌத்தனாக மாறித் தன் மகளையும் பர்மாவிலிருந்த பொளத்த அரசனுக்கு மணஞ் செய்து கொடுத்த சோழ அரசகுமாரன் யாவன் என்பதும் அஃது எத்துணை உண்மைத் தன்மை வாய்ந்தது என்பதும் புலப்படவில்லை.

குலோத்துங்கன் தன் நாட்டில் சுங்கந் தவிர்த்தமை

இனி, குலோத்துங்கன் தன் ஆட்சிக் காலத்தில் நிகழ்த்திய அரிய செயல்களுள் முதலில் வைத்துப் பாராட்டுதற் குரியது. வன் தன் நாட்டில் சுங்க வரியை நீக்கியமையேயாம். நாட்டு மக்கட்கு நலம்புரியக் கருதி இவன் ஆற்றிய இவ்வருஞ் செயல் அக்காலத்தில் மக்கள் எல்லோரையும் மகிழ்வித்தமையால் அன்னோர் இவனை வாயார வாழ்த்திச் "சுங்கந் தவிர்த்த சோழன்” என்று வழங்குவாராயினர். கல்வெட்டிலும் “சுங்கந் தவிர்த் திருள் நீக்கி உலகாண்ட ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்”2 என்று இவ் வேந்தன் குறிப்பிடப்பட்டுள்ளனன். கவிச் சக்கர வர்த்தியாகிய ஒட்டக்கூத்தர்,

“புவிராச ராசர் மனுமுதலோர் நாளில் தவிராத சுங்கந் தவிர்த்தோன்3

1. (a) A Mon Inscription from Prome of the reign of Kyanzittha (1084 - 1112 A.D.) Conversion of a Cholo Prince, (Foreign Notices of South India, p. 133)

(b) Epigraphia Birmanica, Vol. I, pp. 164 and 165.

2. Ins 408 of 1912.

3. குலோத்துங்க சோழன் உலா, வரிகள் 51, 52.