உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

பிரதேசத்தில்

இலக்குமணபுரி

43

பொருட்காட்சியிலுள்ள கன்னோசி மன்னன் கோவிந்த சந்திர தேவன் செப்பேடுகளில் முதலிலுள்ள சில வடமொழிச் சுலோகங்களே கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிற் சுவரிலும் காணப்படுகின்றன. எனவே, முற்றுப் பெறாத நிலையிலுள்ள அக் கல்வெட்டு கன்னோசி மன்னனுடையது என்பது நன்கறியக் கிடக்கின்றது. ஆகவே, குலோத்துங்கனும் கன்னோசி அரசனும் நண்பர்களாக இருந் திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. கன்னோசி வேந்தர்கள் சூரியனுக்குத் தனிக்கோயில் எடுப்பித்து வழிபாடு புரியும் வழக்கமுடையவர்கள்.' அவர்களைப் போல் குலோத்துங்கனும் சோழ நாட்டில் ஓர் ஊரில் சூரியனுக்குக் கோயில் எடுப்பித்து அதற்குக் குலோத்துங்க சோழமார்த் தாண்டாலயம் என்று பெயரிட்டு நாள் வழிபாட்டிற்கு நிவந்தங்களும் வழங்கி யுள்ளான்.* சூரியனுக்கு ஒரு தனிக்கோயில் அமைக்கப் பெற்றுள்ள காரணம் பற்றி அவ்வூர் இக்காலத்தும் சூரியனார் கோயில் என்று வழங்கப்பெற்று வருகின்றது. அக்கோயிலின் ஒருபுறத்தில் காசி விசுவநாதரும் விசாலாட்சியம்மையும் வைக்கப் பெற்றிருத்தல் அறியத்தக்கது. இவற்றையெல்லாம் ஆராயுமிடத்து, நம் குலோத்துங்கனுக்கும் கன்னோசி வேந்தனுக்கும் ஒருவகைத் தொடர்பு இருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப் படும். ஆகவே, குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் சோழ இராச்சியமும் கன்னோசி நாடும் நட்புரிமை பூண்டு விளங்கின என்பது தேற்றம்.

இனி, இந்நாளில் பர்மா என்று வழங்கும் தேசத்திலுள்ள புக்கம் என்னும் மாநகரிலிருந்து கி.பி.1084 முதல் 1112

3.

1. M.E.R. for 1908, part II; p. 65.

2. Annual Report on South Indian Epigraphy for 1926 - 27 part II, para 19. முதற் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்தில்தான் சூரியனுக்குத் தனிக் கோயில் எடுப்பித்து வழிபாடு புரியும் வழக்கம் நம் தமிழகத்தில் முதலில் தொடங்கியிருத்தல் வேண்டும் என்றும் அதுவும் வடபுலத்துக் கன்னோசி வேந்தர்கட்கும் இவனுக்கும் ஏற்பட்டிருந்த தொடர்பினால் உண்டாயிற் றென்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். (Ibid, pp, 79 and 80.) சூரியனார்கோயிலில் குலோத்துங்கன் எடுப்பித்த குலோத்துங்க சோழ மார்த் தாண்டலயம் வடவேந்தர் தொடர்பினால் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், சூரியனுக்குத் தனிக் கோயில் கடைச்சங்க காலத்திலேயே நம் தமிழகத்தில் இருந்தது என்பதும்; எனவே, அவ் வழிபாடு தொன்மை வாய்ந்தது என்பதும்; சிலப்பதிகாரத்திலுள்ள மங்கலவாழ்த்துப் பாடலாலும், கனாத் திறமுரைத்த காதையாலும் நன்கறியக் கிடத்தல் உணரத் தக்கது.